Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அரசியல் தூக்கலாக கமல் நடிக்கும் அடுத்த படத்துக்கு இசையமைக்கும் ரஹ்மான். பட தலைப்பே இவ்வளவு மாஸா என சிலாகிக்கும் நெட்டிசன்கள்.

மக்கள் நீதி மைய்யம் தொடங்கி கமல் அரசியலில் செம்ம பிஸி. அதுமட்டுமன்றி மனிதர் பிக் பாஸ் 3 வரை வந்துவிட்டார். ஏற்கனவே “சபாஷ் நாயுடு” டிராப். அடுத்ததாக ஆரம்பிக்கப்பட்ட “இந்தியன் 2 ” சமரசம் அடைந்தது என்பதற்கு எந்த வித முழு ஆதாரமும் இல்லை. எனினும் ஆகஸ்ட் பட ஷூட்டிங் துவங்கவுள்ளதாக சொல்லுகின்றனர் கோலிவுட்டில் விஷயம் அறிந்தவர்கள்.

இந்நிலையில் இன்று ரஹ்மான் கமலுடன் உள்ள போட்டோவை அப்லோட் செய்தார். மேலும் பிரம்மாண்ட ப்ரொஜெக்டில் இணைவதாகவும் சொல்லினார். கூடவே ராஜ்கமல் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் இருவரையும் டாக் செய்தார்.

( ராஜ் கமல் தயாரிப்பில் சபாஷ் நாயுடு ஆரம்பிக்கப்பட்டது, அதன் தமிழ், தெலுங்கு விநியோக உரிமை லைக்கா நிறுவனம் பெற்றது. இந்தியன் 2 தயாரிப்பை துவங்கியது லைக்கா புரொடக்ஷன்ஸ் தான்.) இந்நிலையில் சில நெட்டிசன்கள் இது இந்தியன் 2 அப்டேட் என கூறினர். ஆனால் அது உண்மை அல்ல.

தலைவன் இருக்கிறான்

இந்நிலையில் தன ட்விட்டர் வாயிலாக “தலைவன் இருக்கிறான்” என்ற ப்ரொஜெக்ட் தான் அது தெளிவு படுத்தியுள்ளார் கமல். 2015 இல் கமல் தொடங்குவதாக சொல்லப்பட்ட அரசியல் படமே இது. இந்திய அரசியல் சூழலை புட்டு புட்டு வைப்பது போன்ற கதைக்களம், அதில் கமலுக்கு நெகட்டிவ் ரோல் என்றும் அந்த நேரத்தில் சொல்லப்பட்டது.

“சில படங்கள் தான் நாம் உருவாக்கும் பொழுதே நம்மக்கு மகிழ்ச்சியை தரும். அப்படி பட்ட ஒன்று தான் இப்படம். நீங்கள் இணைவது படத்திற்கு பலம். உங்களது ஆர்வம் அடுத்தவருக்கும் விரைவில் தொற்றிக்கொள்ளும். அதனை நான் இரண்டு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பகிர்கிரேன்.” என ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

சினிமாபேட்டை கிசு கிசு

’சபாஷ்நாயுடு’ படத்தைத் தொடருவது சாத்தியமில்லை அதற்குப் பதிலாக இன்னொரு படம் உங்கள் நிறுவனத்துக்குச் செய்து தருகிறேன் என்று சொன்ன கமல்; ‘தேவர் மகன்2’ வை கையில் எடுப்பார் என்று பலரும் நினைத்த நேரத்தில் இந்த படத்தை மீண்டும் தூசி தட்டியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top