ஜனவரி 26 ஆம் தேதி டிவிட்டரில் இணைந்தார் கமல். இன்றுவரை அவரை அறுபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடருகின்றனர். தொடங்கியநாளிலிருந்து ஒரிரு பதிவுகளை மட்டுமே போட்டிருக்கிறார் கமல்.

நேற்று அவருடைய மகளும் நடிகயைமான ஸ்ருதிஹாசன் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்துச் சொல்லி ஒரு டிவிட் போட்டிருந்தார். அதைப்போட்ட ஒரு மணிநேரத்திலேயே இன்னொரு டிவிட் போட்டிருக்கிறார் அதில், என் டிவீட்டில் தமிழில்லையென மனங்கோணும் அன்பர்கட்கு, இத்தோழி என் தோள் மிஞ்சப் பல காரணங்கள், அக்காலணியின் உயரமும் சேரும் என்று போட்டிருக்கிறார். மகளுக்கு அவர் சொன்ன பிறந்தநாள் வாழ்த்தின் தமிழாக்கம்தான் இது.

அதிகம் படித்தவை:  பழைய சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல்?போஸ்டரில் மறைந்திருக்கும் ரசியங்கள்

அவர் ஆங்கிலத்தில் வாழ்த்துப்போட்டதும், அவருடைய நட்புவட்டத்தில் இருப்பவர்களே, தமிழில் போடவில்லையென்று கேட்டதால் அதைத் தமிழிலும் போட்டிருக்கிறார். அவரிடம் தமிழில் போடவில்லை என்று சொல்வதற்கும் ஆள் இருக்கிறது, சொன்னதைக் கேட்டதும் உடனே இவர் தமிழில் போடவும் செய்திருக்கிறார்.

அதிகம் படித்தவை:  புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளாரா கமல்ஹாசன்!?

உலகநாயகன் என்று பட்டம் இருந்தாலும் தென்னிந்தியநடிகர்சங்கம் தமிழ்நாடுநடிகர்சங்கம் ஆகவேண்டும் எனும்போது இந்தியநடிகர்சங்கம் ஆகவேண்டும் என்று சொல்லியிருந்தாலும் டிவிட்டரில் தமிழைப் பயன்படுத்தியிருக்கிறார் என்று அவரைப் பாராட்டுகிறார்கள்.