fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கமலுக்கே நடிப்பு கற்றுக்கொடுத்த ராட்சசன்.. ஆண்டவரை மிஞ்சிய அரக்கன்

Kamal-

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கமலுக்கே நடிப்பு கற்றுக்கொடுத்த ராட்சசன்.. ஆண்டவரை மிஞ்சிய அரக்கன்

நம் தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜிக்கு அடுத்தபடியாக நடிப்பில் தனி முத்திரை பதித்தவர் கமல்ஹாசன். இன்றளவும் கூட இவருடைய நடிப்பை மிஞ்ச ஆள் கிடையாது என்பது தான் உண்மை. அதனாலேயே இவர் ரசிகர்களால் உலகநாயகன், ஆண்டவர் என்று அழைக்கப்படுகிறார்.

சிறுவயதில் இருந்தே நடித்து வரும் கமல் ஹாசன் களத்தூர் கண்ணம்மாவில் இருந்து விஸ்வரூபம் எடுத்து இன்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளார். இவர் கேமராவுக்கு முன்னால் வந்து விட்டால் முகத்தில் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு எக்ஸ்பிரஷன் காட்டும்.

அந்த அளவுக்கு நடிப்பின் மீது இவருக்கு தீராத வெறி உண்டு. ஒரு கேரக்டர் கொடுத்தால் அதை அப்படியே உள்வாங்கி அந்த கேரக்டராகவே மாறி விடுவது இவருடைய தனி சிறப்பு. அதனால் தான் இவரை நடிப்புக்கு சிறந்த உதாரணமாக பலரும் கூறுகிறார்கள்.

எத்தனை வயதானாலும் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் நடனம், மேக்கப் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கற்றுத் தேர்ந்தவர். இன்றைய தலைமுறை நடிகர்கள் அனைவரும் இவரிடம்தான் நடிப்பை கற்றுக் கொள்ள வேண்டும் என்று பலரும் கூறுவது உண்டு.

ஆனால் அப்படிப்பட்ட கமலே நடிப்பைக் கற்றுக் கொண்டது வேறு ஒருவரிடம் தான். இது பலருக்கும் ஆச்சரியமான தகவலாக இருக்கலாம். ஆனால் என்னுடைய ரோல் மாடல் இவர்தான். அவரைப் பார்த்துதான் நான் நடிப்பைக் கற்றுக் கொண்டேன் என்று கமல்ஹாசன் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

அவர் வேறு யாருமல்ல பிரபல ஹாலிவுட் நடிகர் அல் பசினோ தான். இவர்தான் கமலுக்கு நடிப்பில் குருவாம். இவரின் நடிப்பில் வெளிவந்த காட்பாதர், ஹூட் தி ரெக்ரூட் போன்ற படங்கள் இவருடைய அற்புதமான நடிப்புக்கு சான்றாக இருக்கிறது. அதிலும் காட்பாதர் திரைப்படம் குறைந்த அளவு பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பல மடங்கு லாபம் பார்த்தது.

மேலும் இவர் நடிப்பில் வெளியான படங்கள் ஒவ்வொன்றும் நம்மை பிரமிக்க வைக்கும் அளவில் இருக்கும். இவர் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்காக தன் முழு அர்ப்பணிப்பையும் கொடுக்கக்கூடியவர். அதனால் தான் இவரை பலரும் நடிப்பு பல்கலைக்கழகம் என்று கூறுகின்றனர்.

ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கி குவித்திருக்கும் இவர் பல தலைமுறைகள் தாண்டியும் ஜொலிக்கும் ஒரு நட்சத்திரமாக இருக்கிறார். இவரைத்தான் கமல்ஹாசன் ரோல் மாடலாக வைத்து பின்பற்றி வருகிறார். இவரின் நடிப்பை பற்றி கமல் பல பேட்டிகளில் மிகவும் பெருமையுடன் கூறியிருக்கிறார். அந்தவகையில் இவர் ஆண்டவரையே மிஞ்சிய நடிப்பு அரக்கனாக இருக்கிறார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top