ராஜதுரை இயக்கத்தில் கௌதம் கார்த்திக், கேத்ரின் தெரசா, ப்ரியா ஆனந்த், பிரபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை குளோபஸ் மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகின்றது.

இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக் சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்திற்காக இசைஞானி இளையராஜா ஐந்து பாடல்களை கம்போஸ் செய்துள்ளார். இவற்றில் ஒரு பாடலை உலக நாயகன் கமல்ஹாசன் பாடுகிறாராம்.