எப்போதுமே நாங்கள் வெற்றி கூட்டணி.. 2 ஜாம்பவான்கள் சேர்ந்த ரூபம் தான் கமல்

நடிகர் திலகம் சிவாஜி மற்றும் நாகேஷ் இருவரும் நடிப்பில் மிரட்டக்கூடிய ஜாம்பவான்கள். இருவரும் தங்களுக்கு என்று ஒரு தனிபாணியில் அசத்த கூடியவர்கள். சிவாஜி மற்றும் நாகேஷ் இருவரும் இணைந்து நடித்த படம் என்றால் அது சூப்பர் ஹிட் தான். இந்த இருவரின் இடத்தை தற்போது வரை யாராலும் நிரப்ப முடியவில்லை.

ஆனால் சிவாஜி, நாகேஷ் இருவரும் கலந்த கலவைதான் உலகநாயகன் கமலஹாசன். தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றதில் முக்கிய பங்கு கமலுக்கும் உண்டு. நடிப்புக்காக கமல் பல அர்ப்பணிப்புகள் செய்துள்ளார்.

ஆக்ஷன், காமெடி, நடனம், பாட்டு என அனைத்தும் கமலஹாசனுக்கு சர்வசாதாரணம். கமலின் பல படங்களில் வசனம் எழுதியவர் கிரேசி மோகன். அதுமட்டுமல்லாமல் கமலின் நெருங்கிய நண்பர் கிரேசி மோகன். இவர்களது கூட்டணியில் வெளியாகும் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும்.

ஆனால் சமீபகாலமாக கமலின் படங்களில் அந்த அளவுக்கு நகைச்சுவை பெரிதாக பார்க்க முடியவில்லை. ஒரு பேட்டியில் கிரேசி மோகன் கூறுகையில், கமல் இல்லையென்றால் நான் எல்லாம் இப்பொழுது எங்கே இருக்கிறேன் என்றே தெரியாது. அந்த அளவிற்கு எனக்காக இறங்கி நிறைய படங்களை கொடுத்து என்னையும் வாழ வைத்தார் கமல் என குறிப்பிட்டிருந்தார்.

கமலும், கிரேசிமோகனும் இணைந்த முதல் படம் அபூர்வ சகோதரர்கள். இதைத்தொடர்ந்து இந்த வெற்றிக் கூட்டணி பல படங்களில் இணைந்து பணியாற்றி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இவர்கள் இருவரும் இணைந்த படம் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெறும்.

மைக்கேல் மதன காமராஜன், பஞ்சதந்திரம், சதிலீலாவதி, காதலா காதலா, அவ்வை சண்முகி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் என கமல், கிரேசி மோகன் இருவரின் கூட்டணியில் வெளியான படங்கள் எல்லாம் அட்டகாசமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் கமலுக்கும், எனக்கும் உண்டான உறவு தொப்புள் கொடி உறவு என கூறியிருந்தார் கிரேசி மோகன்.

Next Story

- Advertisement -