கமல் நடிப்பில் அட்டர் பிளாப் ஆன 5 படங்கள்.. காசெல்லாம் கரியாக்கிய பட லிஸ்ட்

தமிழ் சினிமாவில் பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களால் உலக நாயகன் என்று அழைக்கப்படும் பெருமைக்குரியவர் கமல்ஹாசன். இவரின் நடிப்பில் வெளியான படங்கள் ஒவ்வொன்றும் காலம் கடந்தும் நம் நினைவில் நிற்பவை.

அப்படி கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் வசூலில் தோல்வியை தழுவிய சில திரைப்படங்களை பற்றி காண்போம்.

குணா இந்த திரைப்படத்தில் கமல் தன்னுடைய நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை காட்டி தமிழ் சினிமாவையே ஆச்சரியப்பட வைத்தார். இப்படத்தில் அவர் ஒரு மன நோயாளியாக நடித்து பல உணர்ச்சிகளை தன் முகத்தில் காட்டி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.

மேலும் அவர் இப்படத்தில் ஆபத்தான பல காட்சிகளில் அசால்ட்டாக நடித்திருப்பார். தமிழ்சினிமாவின் பொக்கிஷமாக இருக்கும் இந்த திரைப்படம் தோல்வியை தழுவினாலும் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்தப் படத்திற்காக கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் அவார்ட் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஹேராம் கமல்ஹாசனின் இத்தனை வருட திரை பயணத்தில் இந்த திரைப்படம் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படம் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை சம்பந்தப்பட்ட வன்முறை காட்சிகளை நம் கண்ணெதிரே காட்டியது. மதவாத அரசியலை பற்றி காட்டிய இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் முக்கிய திரைப்படமாக இருக்கிறது.

கமல்ஹாசன் இந்த திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக சிம்பொனி என்ற இசையை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் இந்த திரைப்படம் பல தேசிய விருதுகளையும், பிலிம்பேர் விருதுகளையும் வாங்கிக் குவித்தது. அதில் சிறந்த உடை அலங்காரத்திற்காக கமலின் முன்னாள் மனைவி சரிகா தேசிய விருதை பெற்றார்.

ஆளவந்தான் இப்படம் குடும்பத்தில் ஏற்படும் சண்டைகளால், குழந்தைகள் மனதளவில் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்ற கருத்தைக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். தாணு தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கியிருந்தார்.

இதில் அண்ணன், தம்பி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் கமல் ஹாசன் நடித்து இருந்தார். அதில் ஒரு கேரக்டர் சைக்கோ போன்று அமைக்கப்பட்டிருக்கும். அந்த கதாபாத்திரத்திற்காக கமல்ஹாசன் தன்னுடைய உடல் எடையை ஏற்றி நடித்திருந்தார்

மேலும் கமல்ஹாசன் இப்படத்தில் மோஷன் கிராபிக்ஸ் கேமராவை முதன் முதலில் பயன்படுத்தினார். இதனால் படத்தில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் மிரட்டலாக எடுக்கப்பட்டிருக்கும். கமல்ஹாசனுக்கு இன்றும் பெயர் சொல்லும் படமாக இப்படம் இருக்கிறது.

அன்பே சிவம் அன்புதான் அனைத்திற்கும் முன்னோடி என்பதை நமக்கு காட்டியது இந்த அன்பே சிவம் திரைப்படம். உடல் ஊனமுற்ற ஒரு மனிதராக கமல்ஹாசன் இந்த திரைப்படத்தில் மிக சிறப்பாக நடித்திருப்பார். அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதற்கு உதாரணமாக இந்த திரைப்படத்தை சொல்லலாம்.

சில வருடங்களுக்கு முன்பு உலகையே புரட்டிப் போட்ட ஒரு விபத்து சுனாமி. அந்த துயரத்தில் இருந்து இன்று வரை மீள முடியாத பல மக்கள் இருக்கின்றனர். அந்த நிகழ்வை கமல்ஹாசன் இந்த திரைப்படத்தின் ஒரு காட்சியில் கூறியிருப்பார். இப்படம் வெளியான மறு வருடம் அதாவது 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனாமி பேரலை வந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

மும்பை எக்ஸ்பிரஸ் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் உருவானது. பிளாக் காமெடி என்ற இரண்டை தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஆரம்பித்தது இந்த மும்பை எக்ஸ்பிரஸ் தான்.

படம் முழுவதும் சிரித்துக் கொண்டே இருக்கும் படி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் பல சாகச காட்சிகள் இடம்பெற்றது. இதில் காது கேளாதவராக நடித்திருக்கும் கமல்ஹாசனின் நடிப்பு அனைவரையும் ரசிக்க வைத்தது. ஆனாலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் காலம் கடந்து நம்மை யோசிக்க வைப்பவை. படம் வெளியானபோது ரசிக்க படாமல் பின்னாளில் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படங்கள் அனைத்தும் கமல்ஹாசனின் சாதனை திரைப்படங்கள் ஆகும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்