kamal

உலகநாயகன் கமலஹாசன், தமிழ் சினிமாவை பொறுத்தவரை, அவ்வளவு ஏன் இந்திய சினிமாவை பொறுத்தவரை முடி சூடா மன்னன். பன்முகக் கலைஞன்.

கமலின் அரசியல் வாழ்க்கையை பொறுத்தவரை பி.பா மு, பி.பா பி [பிக் பாசுவுக்கு முன், பின்] என்று தான் பிரிக்க வேண்டும். கமலின் அரசியல் என்ட்ரியும், அவரின் கருத்துக்களும் நாளொரு மேனியும். பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துக்கொண்டு வருகிறது.

சமூக நலன், அரசியில், பொது நலம் என்று இவர் ட்விட்டரில் போடும் கருத்துக்களை பின் பற்றுவோர் எண்ணிக்கை அதிகமாக்கிக் கொண்டே இருக்கிறது.
சில டீவீட்டுகளுக்கு அர்த்தம் புரியும், பல வற்றிற்கு பிறரிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டிய நிலை தான்.

இந்நிலையில் நேற்று இரவு கமல் அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில், தன் புகைப்படத்தை மாற்றினார்.

Kamalahaasan’s New Twitter Profile Picture

முண்டாசுக் கவிஞன் பாரதியின் தோற்றத்தில் கமல். நீல நிற வண்ணத்தில், முறுக்கு மீசையில் கமல் உருவம். பின்னணியில் புரட்சியின் நிறமான சிகப்பு பாக் ட்ரோப். தலைப்பு எதுவும் அவர் குறிப்பிடவில்லை இப்புகைப்படத்திற்கு.

அதிகம் படித்தவை:  ‘தல’ தோனியை திரும்ப திரும்ப முதுகில் குத்தும் புனே அணி!

இதில் அவர் கோவமோக பார்க்கிறாரா அல்லது கருணை பார்வையா என்று இணையத்தில் அலசி வருகின்றனர் அவர் ரசிகர்கள்.

அதிகம் படித்தவை:  பிச்சை எடுத்த நடிகர் விருச்சகாந்த்க்கு உடனே பட வாய்ப்பு கொடுத்த நடிகர்!

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.