கமலஹாசன்

கமல் அரசியல் அறிவிப்பை அறிவித்ததில் இருந்து பல நடவெடிக்கைகளை செய்து வந்தார். அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சென்று கலந்து கொண்டு கமலஹாசன் தன் கருத்தை பதிவு செய்தார்.

kamal
kamal

கமல் நம் பாரமபரிய வேஷ்டி சட்டையில் கலந்துகொண்டு அனைவர் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் சயின்டிஸ்ட், ப்ரோபாசர் என்று சந்தித்தார். மேலும் அரசியல் தலைவர்களை சந்தித்து பலரின் நடப்பையும், சிலரின் ஆதரவையும் பெற்றார் .

Kamal Haasan

இன்று பிப்ரவரி 21 மதுரை ஒத்தக்கடையில் தன் கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள், கட்சியின் உயர் மட்ட உறுப்பினர் விவரம் அறிவிப்பதாக சொல்லியிருந்தார்.

அதே போல் இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தொடங்கிய இடத்தில் இருந்து தன் பயணத்தை அரமபித்தார். கலாம் அவர்கள் இல்லத்துக்கு சென்றார்.

makkal needhi maiam

தான் சொன்னது போலவே இன்று தன் கட்சியின் பெயர் ” மக்கள் நீதி மய்யம்” என்று அறிவித்தார். மேலும் தன் கட்சியின் கொடியையும் ஏற்றினார். கட்சியின் கோடியில் 6 கரங்கள் கூட்டாக இருப்பது போலவும், நடுவில் நட்சத்திரமும் உள்ளது. உழைக்கும் வர்க்கத்தினை குறிக்கும் சிகப்பும் இவர் சின்னத்தில் உள்ளது.

makkal needhi maiam

flag

பின்னர் தன் கட்சியின் உயர் மட்ட உறுப்பினர்களை அறிவித்தார். அதில் கமீலா நாசர், முனைவர். ஞானசம்பந்தன், நடிகை ஸ்ரீ பிரியா போன்றவர்கள் அதில் ஒரு சிலர்.