fbpx
Connect with us

இன்றைய எவிக்சனுக்கு நேற்று முன்னோட்டம் பார்த்த கமல்.. தரமான  சிறப்பான சம்பவம்!

kamal-bigboss-promo

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இன்றைய எவிக்சனுக்கு நேற்று முன்னோட்டம் பார்த்த கமல்.. தரமான  சிறப்பான சம்பவம்!

விஜய் டிவி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நேற்று வார இறுதி நாள் என்பதால் கமல்ஹாசன் கலந்து கொண்டு வீட்டில் உள்ள பஞ்சாயத்துகள் பலவற்றை தீர்த்து வைத்தார்.

அது மட்டுமல்லாமல் சில டாஸ்க்குகளை கொடுத்து கொளுத்தியும் போட்டிருக்கிறார் கமல்.

அந்தவகையில் நேற்று, நாளைய எவிக்சனுக்கான ஒரு முன்னோட்டம் என்று கூறி, ‘போன வாரம் எவிக்சன் ப்ராசஸஸில் உங்களை யார் நாமினேட் பண்ணியிருப்பாங்க என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதுல ரெண்டு பேர சொல்லுங்க’ என்று கன்டஸ்டன்ட்களிடம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து வரிசையாக ஒவ்வொருவராக எழுந்து தங்களை நாமினேட்  செய்தவர்கள் இவர்களாக இருக்கலாம் என யூகித்து  பெயர்களை குறிப்பிட்டனர்.

அந்த வகையில் ஒவ்வொருவரும் யூகித்த  கன்டஸ்டன்ட்களின் பெயர்கள் இதோ:

  • அர்ச்சனா- சுசித்ரா, ஆரி
  • ரியோ- அனிதா, சுசித்ரா
  • சோம்- பாலா, அனிதா
  • ரமேஷ்- சனம்
  • சுசித்ரா- சனம்
  • ஆரி- சம்யுக்தா
  • அனிதா- சம்யுக்தா
  • ஆஜித்- ஆரி
  • ரம்யா- ஆரி
  • சம்யுக்தா- சனம், அனிதா, ஆரி, சுசித்ரா
  • சனம் ஷெட்டி- சுசித்ரா, அர்ச்சனா, நிஷா, ஆஜித், பாலா, ஷிவானி
  • ஷிவானி- ஆரி
  • பாலா- ஷிவானி/ ஆஜித்
  • நிஷா- ஆரி
  • கேப்ரில்லா- சுசித்ரா

எனவே, இவ்வாறு கமல் கொடுத்த டாஸ்க்- இன் மூலம் பிக் பாஸ் வீட்டில் வரும் வாரங்களில் பிரச்சனை நடக்கலாம் என்று அடித்துக் கூறுகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

Continue Reading
To Top