ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், கமல் போட்ட ட்வீட்டில் ஆரம்பித்த அதிரடி, ஜல்லிக்கட்டுக்கு சப்போர்ட் செய்து, அரசியல் சூழலுக்கு ஏற்ப போடா ஆரம்பித்து, இப்போது கமலின் ட்வீட்டுகளுக்கு மக்களிடையே பலத்த வரவேற்பு.

புது முதல்வர் பதவி ஏற்ற அன்று, கவர்னரின் ஈமெயிலை தன் டிவிட்டரில் கொடுத்து, இந்த சிஎம்மை பிடிக்கலைன்னு மெயில் பண்ண சொன்னார்.கிடைத்த கேப்பில் எல்லாம் அதிமுக வை கடுமையாக பேசினார். ஒரு வழக்கு வேறு கமல் மீது போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் , கமலின் நற்பணி இயக்கத்தை சேர்ந்த சுதாகரும் சிலரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.இது அரசியல் வன்மத்தை காட்டுகிறது என்று ட்வீட் செய்துள்ளார் கமல்.

இப்போது அதிமுக அரசுக்கு மறைமுக எச்சரிக்கை ட்வீட்டை போட்டுள்ளார்.