fbpx
Connect with us

Cinemapettai

30 வருடங்களுக்கும் மேல் முடிவுக்கு வராத சண்டை.. கமல், விசுவிற்கு இந்த படத்தில் தான் சண்டையாம்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

30 வருடங்களுக்கும் மேல் முடிவுக்கு வராத சண்டை.. கமல், விசுவிற்கு இந்த படத்தில் தான் சண்டையாம்!

மூத்த நடிகர்கள், இயக்குனர்கள் சினிமாவில் ஆரோக்கியமான சண்டை போட்டுக்கொள்வது வாடிக்கை தான். ஆனால் நீண்ட வருடங்களாக கமலஹாசன், விசுவுக்கு இடையிலான சண்டை முற்றி கொண்டேதான் போனதே, தவிர எந்த ஒரு முடிவுக்கும் வரவில்லை.

அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் 1982-ல் கமலஹாசன் நடிப்பில் உருவான சிம்லா ஸ்பெஷல் என்ற படத்திற்கு வசனம் எழுதியவர் விசு, ஒரு சில வசனத்தை மாற்றுவதற்காக இருவருக்கும் இடையில் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் கடைசிவரை வசனத்தை மாற்றவே மாட்டேன் என்று ஒற்றைக்காலில் நின்றுள்ளார் விசு. இதில் தொடங்கிய பிரச்சனைதான் சினிமாவை தாண்டி அரசியலிலும் எதிர்மறை விமர்சனங்களை விசு கமல் மீது வைத்து வந்தார்.

இன்னும் சுவாரசியம் கமல்ஹாசன் ஒரு நாத்திகவாதி, விசு ஒரு ஆத்திகவாதி, அதனால் தான் என்னவோ ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை ஆதரிப்பது போன்று, கமலஹாசனின் அரசியலைப் பற்றி தயவு செய்து என்னிடம் கேள்விகள் கேட்காதீர்கள் என்று ஒரு பேட்டியிலும் தெரிவித்திருப்பார்.

இந்த அளவிற்கு கமலஹாசன் விசுவுக்கு இடையே சண்டை முடிவுக்கு வராமல் பல பட வாய்ப்புகளையும் தவிர்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேல் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கடைசிவரை முடிவுக்கு வரவே இல்லையாம். ஆன்மீகத்தை நேசித்த விசு கமல்ஹாசனை சினிமாவில் கூட ஏற்பதற்கு மறுத்து விட்டாராம்.

Continue Reading
To Top