தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிப்பை நேற்று, இன்று, நாளை என்று பிரித்தால் சிவாஜி, கமல், விக்ரம் என்று தான் வரும். அந்தளவுக்கு நடிப்பில் ஈடுபாடும், கவனமும் அதிகம் உடையவர்கள். இதில் கமல் தயாரிப்பில் விக்ரம் நடிப்பார் என்பதால் நமக்கு கூடுதல் ஆர்வம் ஒட்டிக்கொண்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

vikram

கமலே இப்படத்தின் அறிவிப்பை பற்றி தன் ட்விட்டரில் வெளியிட்டது தெரியும். கமலின் இளைய மக்கள் அக்ஷரா இப்படத்தில் நடிப்பது நாம் எதிர்பார்க்காத ஆச்சிரியம் என்று தான் சொல்ல வேண்டும். இன்னும் பெயரிடப்படாத இதனை ‘டிரைடென்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் கமல் அவர்கள்.

ராஜேஷ் செல்வா

Rajseh M Selva – Kamalahaasan

கமலின் தூங்காவனம் படத்தின் இயக்குனர். உத்தமவில்லன், விஸ்வரூபம் படத்தில் கமலுடன் பணியாற்றியவர். இவர் தன் ட்விட்டரில் கமலுக்கும், விக்ரம் மற்றும் அவரின் ரசிகர்களுக்கு தன் நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் சவுண்ட் டிசைனர் குணால் ராஜன் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் இணைந்து வேலை செய்ய போவதை தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அது மட்டும் அல்லாது படத்தின் முதல் லுக் போஸ்டர் போன்ற ஒன்றை சீயான் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

And it's official. #chiyaan56 #madeinparamakudi

A post shared by Vikram (@the_real_chiyaan) on

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

இப்படத்தை பற்றிய அறிவிப்பை புத்தாண்டு அன்று வெளியிட முன்பு முடிவு செய்துளார்கள். எனினும் விக்ரமின் தந்தை தவறிய காரணத்தால் இந்த அறிவிப்பு தள்ளிப்போனதாம். மேலும் இப்படம் டோண்ட் பரீத் என்ற படத்தின் ரீ- மேக் இல்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. ஜனவரி 26 அன்று மற்ற அறிவிப்புக்கள் வெளி வர வாய்ப்பு உள்ளது.