தமிழக சட்டசபை உறுப்பினர்களுக்கு எதிராக மக்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் நடிகர் கமலஹாசன் நடந்து கொள்வதாக இந்திய தேசிய லீக் கட்சி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

கடந்த 18ம் தேதி நடிகர் கமலஹாசன் சட்டசபை உறுப்பினர்கள் தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் “People of Tamizhnadu, Welcome your respective MLAs with the respect they desrve back home” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது தமிழ்நாட்டு மக்களே தங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை தகுந்த மரியாதையுடன் வரவேற்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக மக்களிடையே வன்முறை தூண்டிவிடும் விதமாக கமல் பேசியிருப்பதாக, இந்திய தேசிய லீக் கட்சியின் வட சென்னை மாவட்ட தலைவர் பிர்தவ்ஸ் நடிகர் கமலஹாசன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழக மக்களுக்கு ஆதரவாகவும், சசி குரூப்பிற்கு எதிராகவும் கருத்து தெரிவித்திருந்தார் கமல்ஹாசன். தற்போது அவர் மீது போலீசில் புகார் செய்திருப்பது மன்னார்குடி கும்பலின் சதிவேலையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.