Connect with us
Cinemapettai

Cinemapettai

biggboss-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கமல்ஹாசனை விட 200 கோடி அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்.. ஏமாற்றிய விஜய் டிவி மீது செம கடுப்பில் உலகநாயகன்

விஜய் டிவி தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனை தொடங்குவதற்கான அனைத்து வேலைகளையும் தொடங்கிவிட்டது. முன்னதாக கமலஹாசன் நடித்த ப்ரோமோ வீடியோ வெளியானது.

அந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் டிவி ஆரம்பத்திலேயே அப்செட்டாகி உள்ளதாம்.

இதுவரை விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் 3 சீசன்களை கடந்த நிலையில் மூன்றையுமே உலகநாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கினார். நான்காவது முறையும் அவரே தொகுத்து வழங்க உள்ளார்.

இதற்காக கமலஹாசனுக்கு 25 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நிகழ்ச்சியாக வலம் வருகிறது.

இந்தியில் தற்போது 14 வது சீசன் சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனை தொகுத்து வழங்க சல்மான் கானுக்கு 240 கோடி சம்பளம் வழங்க உள்ளாராம் அந்த டிவி நிறுவனம்.

அதில் 10% சம்பளம் மட்டுமே கமலஹாசனுக்கு கொடுப்பதால் விஜய் டிவி மீது செம கடுப்பில் இருக்கிறாராம் கமலஹாசன். வருத்தத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வந்த வரை லாபம் என 25 கோடிக்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

நிகழ்ச்சி ஆரம்பித்து சில வாரங்கள் கழித்து சம்பளத்தை ஏற்றிக் கொள்ளலாம் என முடிவு செய்து காய்நகர்த்தியுள்ளார் உலகநாயகன்.

Continue Reading
To Top