கமலிடம் 10 கோடி சம்பளம் கேட்ட நடிகர்.. இதுல நான் 3 படம் எடுத்துடுவேன், போங்க தம்பி என்ற உலக நாயகன்

தேர்தல் தோல்விக்கு பிறகு கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் ஆயிரம் பிரச்சனைகள் வந்தாலும் தற்போது அதையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் அடுத்ததாக விக்ரம், இந்தியன் 2 போன்ற படங்களை ஒரே நேரத்தில் நடித்து முடிக்க முடிவு செய்துள்ளாராம். அதற்கான வேலைகள் தற்போது பரபரப்பாக தொடங்கப்பட்டுள்ளன.

முன்னதாக அவர் நடிக்கவுள்ளது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் என்ற சொந்த கம்பெனியில் தயாரிக்கும் விக்ரம் படத்தில் தான். கமல்ஹாசனின் தீவிர ரசிகர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் லோகேஷ் திரைப்படமாகவும் விக்ரம் படம் மாறியுள்ளது. இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியானபோதே படத்தின் எதிர்பார்ப்பு இரட்டிப்பானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகிய இருவரிடமும் பேசி வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில் பகத் பாசில் ஏற்கனவே விக்ரம் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

ஆனால் தற்போது லோகேஷ் விஜய் சேதுபதி நடித்தால் நன்றாக இருக்கும் எனக் கருதி கமலிடம் சொல்ல, அவரும் விஜய் சேதுபதியிடம் பேச, கடைசியில் 10 கோடி கேட்டு கமலை ஆப் செய்து விட்டாராம். 10 கோடியில் பல படங்கள் எடுத்து விடுவேன் என கமல் பின்வாங்கியதாக செய்திகள் வந்துள்ளன.

vijaysethupathi-cinemapettai
vijay-sethupathi-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்