Connect with us
Cinemapettai

Cinemapettai

lokesh-kamal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

யப்பா லோகேஷ், உனக்கு வேற ஆளே கிடைக்கலையா.. கடுப்பான கமல்

கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் மீண்டும் மீண்டும் அதே நடிகர் தான் வேண்டும் என கமலிடம் அடம் பிடித்ததால் கமலஹாசன் சற்று கோபப்பட்டு விட்டதாக அவர்களது வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்துள்ளன.

சினிமாவில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் வெறும் கமலஹாசன் படங்களை மட்டுமே பார்த்து சினிமா கற்றுக்கொண்டதாக லோகேஷ் கனகராஜ் பல மேடைகளில் குறிப்பிட்டுள்ளார்.

அப்படிப்பட்ட லோகேஷ் கனகராஜ் தன்னுடைய குருநாதர் கமலஹாசனை இயக்க வாய்ப்பு கிடைத்தால் சும்மா இருப்பாரா. பட்டையை கிளப்பும் கதையுடன் களம் இறங்கிவிட்டார். அந்த படத்திற்கு விக்ரம் என பெயர் சூட்டியுள்ளனர்.

விக்ரம் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தாலும் அது நெட்பிளிக்ஸ் தளத்தில் வந்த ஒரு குறிப்பிட்ட வெப்சீரிஸ் காப்பி என்பது அப்பட்டமாக தெரிந்தது. இதனால் படக்குழு கொஞ்சம் அப்செட் ஆனது.

அதைத்தொடர்ந்து நீண்ட நாட்கள் கழித்து தற்போதுதான் விக்ரம் படத்தின் படப்பிடிப்புகள் வேகமெடுத்துள்ள நிலையில் மீண்டும் விஜய் சேதுபதியே வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என கமலஹாசனிடம் கூறியுள்ளார் லோகேஷ்.

ஆனால் கமலஹாசனோ இப்போதுதான் மாஸ்டர் படத்தில் அவர் நடித்ததாகவும், அதே நடிகரை தன்னுடைய படத்திலும் நடிக்க வைத்தால் வில்லத்தனத்தில் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் என எடுத்துச் சொல்லியுள்ளார். ஆனால் கமல் எவ்வளவு சொல்லியும் எனக்கு அவர் தான் வேண்டும் என அடம் பிடித்து கொண்டிருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.

vikram-cinemapettai

vikram-cinemapettai

Continue Reading
To Top