வளர்ர ஹீரோன்னு வாய்ப்பு கொடுத்தா கமலையே புலம்ப விட்ட 2 நடிகர்கள்.. புத்தியை காட்டிட்டாங்க!

Kamalhaasan: கமலஹாசன் தன்னுடைய 60 ஆண்டுகளுக்கும் மேலான சினிமா வாழ்க்கையில் தான் சினிமாவால் சம்பாதித்ததை சினிமாவுக்காகவே செலவு செய்பவர். கடந்த 1981 ஆம் ஆண்டு ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் தன்னுடைய படங்களை மட்டுமே தயாரித்து வந்த கமல் பின்னர் மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு அக்சரா ஹாசன் மற்றும் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் திரைப்படத்தை தயாரித்த கமல், அதன் பின்னர் 2022ல் விக்ரம் படத்தை தான் தயாரித்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. வசூலிலும் சாதனை படைத்தது. இதனால் மீண்டும் கமல் தன்னுடைய தயாரிப்பு பணிகளை ரொம்பவும் ஆர்வமாக தொடங்கி விட்டார்.

கமல், விக்ரம் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் படத்தை தயாரிப்பதற்கு ஆயத்தமானார். சிவகார்த்திகேயன் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தன்னுடைய 21 ஆவது படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். ஆனால் அதே சமயத்தில் மாவீரன் பட வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், சிவகார்த்திகேயன் இல்லாத காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டு கொண்டிருந்தது.

சிவகார்த்திகேயன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் பொழுதும் அவர் படப்பிடிப்புக்கு சரியாக வராமல் இருந்திருக்கிறார். இதனால் ஜம்மு காஷ்மீரில் 60 நாட்கள் ஷூட்டிங் நடைபெற திட்டமிட்டப்பட்டிருந்த நிலையில், அது 90 நாட்களாக மாறி இருக்கிறது. இதனால் பட்ஜெட் அதிகமாகிவிட்டது. கமலஹாசன் தற்போது சிவகார்த்திகேயன் மீது செம கோபத்தில் இருக்கிறார்.

அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் பொழுது பட்ஜெட் குறிப்பிட்ட அளவு தான் கொடுக்கப்படும் என தயாரிப்பு குழு இயக்குனரிடம் சொல்லி விட்டதாம். சரி சிவகார்த்திகேயன் தான் இப்படி என்றால், சிம்பு அதற்கு மேல் கமலஹாசனை புலம்ப விட்டுக் கொண்டிருக்கிறார். சிம்புவின் 48வது படத்தை கமல் தயாரிப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில நாட்களிலேயே சிம்பு இந்தியாவை விட்டு பறந்து விட்டார். படத்திற்காக பயிற்சி எடுக்கிறார், நீளமாக முடி வளர்த்திருக்கிறார் என்ற தகவல்கள் வெளி வருகிறதே தவிர படப்பிடிப்பு ஆரம்பித்த பாடில்லை. வளர்ந்து வரும் ஹீரோக்களை தூக்கி விடுவோம் என்று நினைத்த கமலை மொத்தமாக புலம்ப வைத்திருக்கிறார்கள் சிம்புவும், சிவகார்த்திகேயனும்.