திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

கமல் தோத்தது நல்லதா போச்சு.. அடுத்தடுத்து தயாராகும் 3 பிரம்மாண்ட படங்கள்

சமீபத்தில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமலஹாசன் கடைசிவரை ஜெயிக்கிற மாதிரி வந்து இறுதியில் தோல்வியைத் தழுவினார். இதன் பின்பு பல அரசியல் இருந்தாலும் முதல் முறையாக போட்டியிட்ட போதே எதிர்த்து போட்டியிட்டவர்கள் மிரள விட்டார்.

அடுத்த முறை கண்டிப்பாக கமலஹாசனுக்கு ஒரு எம்எல்ஏ பதவி உறுதி. ஆனால் இந்த முறை கமல்ஹாசன் தோற்றதற்கு பலரும் சந்தோஷப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் அவருடைய அடுத்தடுத்த படங்கள் பல வெயிட்டிங்கில் இருப்பதுதான்.

தற்போது கமல்ஹாசன் தன்னுடைய சிஷ்யன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படத்தின் மிச்ச மீதியையும் நடித்து முடித்துக் கொடுக்க உள்ளாராம். மேலும் சபாஷ் நாயுடு, தலைவன் இருக்கின்றான் போன்ற படங்களையும் தூசி தட்ட உள்ளாராம் கமல் ஹாசன்.

கமலஹாசன் தேர்தலில் போட்டியிடும்போது, இதனால் தனக்கு 100 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்படும் என ஓப்பனாக தெரிவித்திருந்தார். அந்த வகையில் விட்டதை பிடிக்க வேண்டும் என களம் இறங்கிவிட்டதாக கூறுகின்றனர்.

இதற்கிடையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமும் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறுகின்றனர். ஆக மொத்தத்தில் அடுத்த 5 வருடத்தில் கமல்ஹாசன் நடிப்பில் குறைந்தது 5 படங்களாவது வெளிவந்து விடுமாம்.

kamal-upcoming-movies-cinemapettai
kamal-upcoming-movies-cinemapettai
- Advertisement -spot_img

Trending News