நடிகர் கமல்ஹாசன் இப்போதெல்லாம் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடந்து வரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து தன் மனதில் பட்டத்தை கூறி வருகிறார்.

இந்நிலையில் அவர் ஒரு ஒரு நாளும் என்ன கருத்து கூறுவார் என அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் சசிகலா, ஓ.பி.எஸ், எடப்பாடி ஆகியாரின் நடவடிக்கைகள் குறித்து சில விஷயங்களையும் பதிவிட்டு வருகிறார்.

தற்போது அவர் இனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின் கைது பேசவைக்கிறது என பதிவிட்டிருக்கிறார். என்றும் தமிழ் நாடு ஜ.கட்டுப் போராட்டத்தில் எமதியக்கத்தின் சுதாகரும் சிலரும் நேற்று கைது இது எமதுபெருமையைக் கூட்டவும் அரசியல் வன்மத்தைக் காட்டவும் செய்கிறது என ட்வீட் செய்துள்ளார்.