சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரும் முன்பும், வந்த பிறகும் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார் உலக நாயகன் கமல் ஹாஸன். தமிழக அரசியல் சூழல் பரபரப்பானதில் இருந்தே அவர் அவ்வப்போது ட்வீட்டி வருகிறார்.

என்ன, அவர் சொல்வது தான் பலருக்கும் புரிவது இல்லை. கொஞ்சம் புரியும்படி ட்வீட் செய்யுங்கள் தலைவரே என்று ரசிகர்கள் அழாத குறையாக கெஞ்சி வருகிறார்கள்.


நீங்கள் தமிழில் ட்வீட் பண்ணுவது தான் சுத்தமாக புரியவில்லை வாத்தியாரே என்று நெட்டிசன்கள் கமலிடம் ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.