அயலான் படத்திற்கும் வலை விரித்த கமல்.. சிவகார்த்திகேயன் போட்ட பக்கா ஸ்கெட்ச்

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள டான் திரைப்படம் தற்போது சக்கைபோடு போட்டு வருகிறது. சென்டிமென்ட், கலாட்டா, காமெடி என்று படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து விஷயங்களும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

அந்த வகையில் டான் திரைப்படம் தற்போது அதிக வசூலை பெற்று மாஸ் காட்டி வருகிறது. இதை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் அயலான் திரைப்படம் உருவாகி கொண்டிருக்கிறது. ராஜேஷ் இயக்கும் இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

ஏற்கனவே சிவகார்த்திகேயனின் படங்கள் ரிலீசாகும்போது பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர் அதில் சிக்காமல் தத்ரூபமாக ஸ்கெட்ச் போட்டு படத்தை ரிலீஸ் பண்ணி கொண்டிருக்கிறார். அதேபோன்று விரைவில் வெளியாக இருக்கும் அயலான் படத்துக்கும் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க சிவகார்த்திகேயன் ஒரு பக்கா ப்ளான் போட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது சிவகார்த்திகேயன் விரைவில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அதனால் அவர் அயலான் திரைப்படத்தை கமலின் தயாரிப்பு நிறுவனம் வாங்கி ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்து ஆண்டவரிடம் இதைப் பற்றி பேசியதாக தெரிகிறது.

அதை ஏற்ற கமல் தரப்பு அந்த படத்தின் தயாரிப்பாளரை அழைத்து படத்திற்காக எவ்வளவு செலவு செய்திருந்தாலும் அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் தயாரிப்பாளர் படம் தற்போது நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது. அதனால் நாங்களே ரிலீஸ் செய்து கொள்கிறோம் என்று கூறி இருக்கிறார்.

சமீபகாலமாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் வசூலை வாரி குவித்து வருகிறது. அதனால் அயலான் திரைப்படத்தை வெளியிடுவதன் மூலம் ஒரு லாபம் பார்க்கலாம் என்று கமல் நினைத்த வேளையில் தற்போது அது நிறைவேறாமல் போய்விட்டது.

Next Story

- Advertisement -