Connect with us
Cinemapettai

Cinemapettai

kamal-actor

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லம்போகினி, டுகாட்டி என கொடிகட்டிப் பறந்த கமல்.. வெளிநாட்டில் பிரதமர் ஆக மாறிய உலகநாயகன்

தற்போது உலகத்திலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கும் நபர் யார் என்று கேட்டால் அது உலக நாயகனாக தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு விக்ரம் திரைப்படம் அவரை சந்தோஷ கடலில் ஆழ்த்தியுள்ளது. இப்படி ஒரு வரவேற்பை ரசிகர்களிடமிருந்து எதிர்பார்க்காத கமல் சிறு குழந்தை போல குதூகலித்து வருகிறார்.

அறுபத்தி எட்டு வயதான கமலுக்கு விக்ரம் திரைப்படம் தற்போது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதிலும் பல வசூல் சாதனை புரிந்து வருகிறது.

அந்த வகையில் ரீ என்ட்ரியில் இப்படி ஒரு மெகா ஹிட் திரைப்படத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி ஒரு சாதனையை செய்துள்ளார் நம் உலகநாயகன். இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக அவர் பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். எல்லா நாட்டிலும் மக்கள் அவருக்கு அமோகமான வரவேற்பு கொடுத்து அவரை ஆச்சரியப்படுத்தி இருக்கின்றனர்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த கமல் தற்போது வீடியோ மூலம் ரசிகர்களின் அன்பிற்கு நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது ஏகப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக அவர் மலேசியாவிற்கு சென்று வந்தது அவருக்கு மிகவும் மன நிறைவாக இருக்கிறதாம்.

ஏனென்றால் அங்கு அவருக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து அவர் மிரண்டு விட்டாராம். அதாவது விக்ரம் திரைப்படத்தை வாங்கிய டி எம் ஒய் கிரியேஷன்ஸ் நிறுவனம் கமலுக்கு 12 லம்போகினி கார், 20 டுகாட்டி பைக், லிமோசின் கார் என்று பிரதமருக்கு கொடுக்கும் மரியாதையை போன்று இவருக்கும் ஏற்பாடு செய்திருந்தார்களாம்.

இப்படி ஒரு அசத்தலான வரவேற்பைப் பார்த்த கமல் ரொம்பவும் நெகிழ்ந்து போய் விட்டாராம். அந்த அளவுக்கு மலேசிய மக்கள் அவரை எங்கேயோ கொண்டு சென்று விட்டனர் என்று தற்போது திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.

Continue Reading
To Top