மூன்றே வாரத்தில் பல நூறு கோடி வசூல்.. பாக்ஸ் ஆபீஸில் உச்சம்பெற்ற கமல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் கடந்த மூன்றாம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் கமல்ஹாசனுடன் பகத் பாசில், விஜய்சேதுப,தி சூர்யா, நரேன், மைனா நந்தினி, கார்த்தி, மகேஸ்வரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

படம் ரிலீஸ் ஆகி 20 நாட்கள் கடந்த நிலையிலும் நான்கு வருடங்களாக கமலஹாசனை திரையில் பார்க்காத ரசிகர்கள் விக்ரம் திரைப்படத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் அலை மோதுகின்றன. இதனால் தமிழ் சினிமாவில்  முந்தைய பாக்ஸ் ஆபிஸ் வசூலை விக்ரம் திரைப்படம் முறியடித்து நம்பர் ஒன்  படம் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் ரூ. 165 கோடி வசூலை தாண்டி வசூல் வேட்டை ஆடிய விக்ரம், உலக அளவில் 400 கோடியை தாண்டி  வசூல் சாதனை படைத்திருக்கிறது. ஹிந்தியில் மட்டும் இந்த படத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

அங்கு மட்டும் சரியாக  விக்ரம் திரைப்படம் சென்றடைந்திருந்தால், தற்போது 500 கோடி வசூலை கடந்திருக்கும் என்கின்றனர். மேலும் படம் ரிலீஸ் ஆன நாள் முதல் இன்றுவரை எந்தவித நெகட்டிவ் கமெண்ட்களையும் பெறாத விக்ரம்  தொடர்ந்து வசூலில் பின்னிப் பெடலெடுக்கிறது.

இதே நிலை நீடித்தால் கூடிய விரைவில் 500 கோடியை கடந்து விடும். மேலும் படம் ரிலீசான நான்காவது வாரத்திலும் நூற்றுக்கும் அதிகமான திரையரங்கில் விக்ரம் திரைப்படம் ஓடிக்கொண்டிருப்பது ரசிகர்களுக்கு இந்தப் படம் எந்த அளவிற்கு பிடித்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இதுவரை கமலஹாசன் நடிப்பில் வெளியான மற்ற படங்களை காட்டிலும், விக்ரம் படம்தான் அவரை பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், தளபதி விஜய் இவர்களின் வரிசையில் கமலையும் இணைய வைத்திருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →