புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பிக் பாஸை மீண்டும் தொகுத்து வழங்கும் கமல்.. அப்போ விஜய் சேதுபதி?

Kamal : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஏழு சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் இந்த முறை சீசன் 8 அவரால் தொகுத்து வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

ஆரம்பத்தில் இருந்தே விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் பலருக்கும் பிடித்து உள்ளது. ஆனால் இப்போது பிக் பாஸ் அந்த அளவுக்கு சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கமலின் பாணி ஒரு விதமாக இருக்கும் நிலையில் விஜய் சேதுபதி முகத்துக்கு நேராகவே கேள்விகளை கேட்டு விடுகிறார்.

இந்த முறை கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்காததற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. அதாவது தக் லைஃப் மட்டுமல்லாமல் சில படங்களில் கமல் பிஸியாக இருக்கிறார். அதோடு ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் மூலம் பல படங்களை தயாரித்தும் வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் தொகுத்து வழங்க போகும் கமல்

மேலும் அரசியல் கட்சியிலும் பிஸியாக இருப்பதால் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது கமல் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறியிருந்தார்.

அதாவது இந்த முறை ஏஐ டெக்னாலஜியை படிப்பதற்காக வெளிநாடு சென்றதால் அவரால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. கண்டிப்பாக அடுத்த சீசன் கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

ஆகையால் பிக் பாஸ் சீசன் 8 மட்டும் தான் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என தெரிகிறது. எனவே அடுத்த சீசனில் இருந்து கமல் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற இருக்கும் செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

Trending News