தேர்தலுக்குப் பிறகு கமலஹாசன் அடுத்தடுத்து சினிமாவில் நடிக்க பிசியாகி வருகிறார். அதையே தொடர்ந்து அவரது நடிப்பில் உருவாக பல படங்கள் வெயிட் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இன்னும் முடிவுகள்தான் எட்டப்படவில்லை.
முதலில் இந்தியன் 2 பஞ்சாயத்து இன்னும் முடியாமல் இருப்பதால் அந்தப் படத்திற்கு ஒரு விடை கிடைத்தால் தான் அடுத்த படத்திற்கு செல்ல முடியும் என்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு கூட செல்லலாம், ஆனால் அரசியல்வாதியாகவும் இருக்கும் கமல், இவருக்கு இதையே முடிவெடுக்க தெரியவில்லை என குத்திக் காட்டி விடுவார்கள் என பொறுமை காத்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து விக்ரம் படத்தில் நடிக்கலாம் என முடிவு செய்திருந்தார் கமல். ஆனால் இந்தியன் 2 படம் ஒரு பக்கம் பிரச்சினையை கிளப்ப, விக்ரம் படத்திலும் நடிகர்களை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.
இதனால் யோசித்துப் பார்த்த கமல் இப்போதைக்கு இந்த இரண்டு படங்களும் வேலைக்காகாது என வேறொரு படத்தில் ஒப்பந்தமான முடிவு செய்துள்ளாராம். அதுவும் அவர் ஏற்கனவே நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் தான்.
அதுதான் பாபநாசம் 2. மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படம் இரண்டு பாகங்களாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தெலுங்கிலும் திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவிட்டது. தமிழில் எப்போது என்று கேள்வி எழுப்ப முதலில் அதை முடித்து விடலாம் என முடிவு செய்துள்ளாராம். வெறும் ஒரு மாதத்திற்குள் அந்த படப்பிடிப்புகளை முடித்து ரிலீஸ் செய்யலாம் என கணக்கு போட்டு வைத்துள்ளாராம் கமல்.
