பிக்பாஸ் நிகழ்ச்சி.. கண்ணீர் விட்டு குரல் தழுதழுத்த கமல்ஹாசன்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கண்ணீர் விட்டு குரல் தழுதழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் நடிகர் கமல்ஹாசன் அகம் டிவி வழியாக ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்தார். அப்போது ‘ஆட்டம் போடு’ டாஸ்க்கின் போது ஒவ்வோருவருக்கும் ஒரு நடிகர் நடிகையாக இருக்குமாறு பிக்பாஸ் அறிவுத்தியிருந்தார். அதன்படி அந்த கேரக்டர்களாக கமல்ஹாசனிடம் கேள்வி கேட்டனர் ஹவுஸ்மேட்கள்.

விஜயகாந்தாக சரவணன், விஜயாக முகென், சிம்புவாக சாண்டி, அஜித்தாக கவின், சரோஜா தேவியாக மதுமித உள்ளிட்டோர் கேள்வி கேட்டனர். அப்போது விஜயாக இருந்த முகென், பிக்பாஸ் வீட்டிற்குள் வர வேண்டும் என்றால் யாராக வருவீர்கள் என்று கமலிடம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த கமல், தர்ஷனாக வர விரும்புகிறேன் பிக்பாஸ் வீட்டில் தர்ஷன் கமலாக வந்துவிட்டார். தெனாலி படம் வருவதற்கு முன்பே தர்ஷன் தெனாலியாக இருந்தவர் என்று கூறினார் கமல்ஹாசன்.

மேலும் ஈழம் குறித்தும் இலங்கையில் ஈழத் தமிழர்கள் பட்ட வேதனை குறித்தும் மறைமுகமாக பேசிய கமல், கண் கலங்கினார். பேசும் போது அவரது குரல் தழுதழுத்தது. சில நொடிகள் அமைதியாக இருந்தார்.

Leave a Comment