Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Nadu | தமிழ் நாடு

கமலுக்காக அரசியில் களத்தில் குதித்த கஸ்தூரி..! அந்தர் பல்டி வைரலாகும் ட்விட்

kamal-kasthuri

கமலுடன் சேர்ந்து கஸ்தூரி அரசியல் களத்தில் குதித்துள்ளார் . அவர் அரவக்குறிச்சியில் இந்து தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கு கஸ்தூரி முஸ்லிம்கள் இருக்கும் இடத்தில் இந்து தீவிரவாதம் பற்றி பேசி ஓட்டு வாங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதேசமயம் கூட்டத்தில் திருப்திப்படுத்துவதற்காக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியிருந்தார்.

பின்பு நீங்கள் மதரீதியான அரசியல் செய்வதற்கு பதிலாக ஜாதியும் எடுத்துக் கொள்ளுங்கள் என காட்டமாக பதிவிட்டுள்ளார். மேலும் நாதுராம் கோட்சே ஒரு பிராமண தீவிரவாதி என்றும் பேசி தமிழ் மக்களிடம் ஓட்டு வாங்குங்கள் என கோபமாக பதிவிட்டிருந்தார்.

தற்போது கஸ்தூரி கமலஹாசனின் முழு பேச்சையும் கேட்காமல் நான் உள்பட பலரும் தவறாக புரிந்து கொண்டதாகவும் அவரது 30 வினாடி பேச்சை மட்டும் கேட்டு தவறாக புரிந்து கொண்டுள்ளோம்.

கமலஹாசனின் முழு பேச்சையும் கேட்டால் நன்கு புரியும் எனவும், மேலும் இந்தியா குறித்த அவரது திட்டங்கள் அனுபவம் அற்புதமானது என்றும் அவர் இந்துவோ முஸ்லிமோ எந்த மதத்தையும் ஆதரித்தோ எதிர்த்தோ அவர் பேசவில்லை என்பது முழு பேச்சையும் கேட்கும்போது தெரிகிறது என பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் ஹிந்து தீவிரவாதம் பற்றி பேசியது தவறுதான். ஆனால் கமல் மத உணர்வை தூண்டவில்லை அரசியலில் சில விஷயங்கள் அவர் கைவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top