Connect with us
Cinemapettai

Cinemapettai

kamal-indian2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நூலிழையில் உயிர் பிழைத்தேன்.. கமல் பேட்டி

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள இந்தியன்2 படப்பிடிப்பில் இறந்த 3 பேரின் உடல்களுக்கு கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பின் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்:

இந்தியன் – 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து என் குடும்பத்தில் நிகழ்ந்ததாக கருதுகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியன்-2 படபிடிப்பில் இணைந்த கிருஷ்ணா இன்று உயிருடன் இல்லை. நான் நூலிழையில் உயிர் பிழைத்தேன். 4 நொடிகளுக்கு முன்புவரை நான் அங்குதான் இருந்தேன்.

100 கோடி, 200 கோடி என மார்த்தட்டிக்கொள்ளும் நாம் கடைநிலை ஊழியனுக்கும் பாதுகாப்பு தர முடியவில்லை. சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு கூட காப்பீடு இருக்க வேண்டும் என்ற நிலையை எய்த வேண்டும்.

சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கும் பாதுகாப்பு இல்லாதது அவமானமாகும். இது போன்ற விபத்து இனி நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நேரம் இது என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top