Connect with us

Cinemapettai

அந்தரத்தில் தொங்கிய கமல் படத்தை அலேக்காக தூக்கிய சன் பிக்சர்ஸ்.. பழிக்குப் பழி என்ற உலகநாயகன்

kamal-sun-pictures

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அந்தரத்தில் தொங்கிய கமல் படத்தை அலேக்காக தூக்கிய சன் பிக்சர்ஸ்.. பழிக்குப் பழி என்ற உலகநாயகன்

கமல் நடிப்பில் சமீப காலமாக வெளிவரும் படங்களைவிட கைவிடப்படும் படங்கள் அதிகமாக இருக்கின்றன.

அதற்குக் காரணம் சரியான நேரத்தில் படப்பிடிப்புகளை நடத்த முடியாமல் போனது, பட்ஜெட் பஞ்சாயத்துகள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

எப்படியாவது இந்தியன் 2 படத்தை வெளியிட்டு அரசியலில் முதலமைச்சர் ஆகி விடலாம் என கமல் கனவில் மண்ணை அள்ளிப் போட்டது லைக்கா நிறுவனம்.

ஷங்கர் இயக்கத்தில் உருவான அந்த திரைப்படம் பாதி கிணறு தாண்டிய நிலையில் கிடப்பில் கிடக்கிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்ற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இதே நிலைமைதான் ரஜினியின் எந்திரன் படத்திற்கு வந்த நிலையில் அதை மீட்டு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது சன் பிக்சர்ஸ்.

அந்த நட்பு ரீதியாக சங்கர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது.

kamal-bigg-boss-4

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top