ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாசாரமாக பார்க்கப்பட வேண்டியது, மிருகவதையாக கிடையாது என்று, நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த கமல்ஹாசன், தொலைக்காட்சி செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த சிறு பேட்டியில் கூறுகையில், ஜல்லிக்கட்டு என்பது மிருகவதை கிடையாது. அது ஏறுதழுவுதல் என்ற வார்த்தையிலிருந்து உருவானது.

ஏறுதழுவுதல் என கூறுவதில் உள்ள பரிவுத் தன்மை, ஜல்லிக்கட்டு என்ற வார்த்தையில் கிடையாது. மேற்கத்திய நாடுகளில் மாட்டை வைத்து போட்டி நடத்துவர். போட்டி முடிந்ததும் அதன் இறைச்சி தட்டில் வைத்து எல்லோருக்கும் பரிமாறப்படும். தமிழகத்தில் அவ்வாறு காளை மாடுகள் கொல்லப்படுவதில்லை.

ஜல்லிக்கட்டுக்கு தடை போட்டால், பிரியாணிக்கு தடை கோர முடியுமா? இவ்வாறு கமல்ஹாசன் தனது நிலைப்பாடு குறித்து தெரிவித்தார்.