Tamil Cinema News | சினிமா செய்திகள்
மெடிக்கல் லீவுக்கு போன அர்ச்சனாவின் பொய்யான அன்பு.. பாலாஜிக்கு சொம்பு தூக்கியதை விட்டு வைக்காத பிக் பாஸ்
தற்போதெல்லாம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின், வார இறுதி நாட்களின் எபிசோடை காண்பதற்கு மக்கள் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம் கமல் வீட்டில் உள்ள பஞ்சாயத்துகளை தீர்த்து வைக்கும் விதம் தான்.
ஏனெனில் கமல் உண்மையாகவே மக்கள் பிரதிநிதியாக மாறி, பிக்பாஸ் போட்டியாளர்களை வார இறுதி நாட்களில் தாளித்து எடுப்பார். அந்த வகையில் நேற்றய எபிசோடில் கமல் அர்ச்சனாவை கிழித்து தொங்கவிட்டிருக்கும் நிகழ்வு பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.
அதாவது நேற்று முன்தினம் பாலாவிற்கும், சனத்திற்கும் இடையே சண்டை ஏற்பட்டதோடு, மிகப்பெரிய வாக்குவாதமும் நடந்தது. அப்போது பாலாஜி தன் காலில் இருந்த செருப்பை எடுத்து தன்னைத்தானே அடித்துக் கொண்டார்.ஆனால் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் யாரும், இதற்கு பெரிதாக ரியாக்ட் செய்யாமல் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்தப் பிரச்சனையை பற்றி நேற்றைய எபிசோடில் பேசிய கமல் அர்ச்சனாவிடம், ‘அன்பு அன்புனு சொன்னீங்களே! இப்போ உங்க அன்பு மெடிக்கல் லீவு போட்டு போயிருச்சா?’ என்று கேட்டார்.
அதற்கு அர்ச்சனா, ‘நான் அந்த இடத்திலே இல்ல, நிஷா கூட பேசிட்டு இருந்தேன். அதனால கவனிக்கல’ என்று கூறியதற்கு கமல், அர்ச்சனாவை அடுக்கடுக்கான கேள்விகளால் திணறடித்தார்.
மேலும் அர்ச்சனா இதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் கூறிய வார்த்தைகளை திரும்ப திரும்ப பேசி மழுப்பிவிட்டார். எனவே, கமல் இவ்வாறு அர்ச்சனாவின் முகத்திரையை கிழித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

balaji
