Connect with us
Cinemapettai

Cinemapettai

அனிதா மரணத்தின் எதிரொலி! பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்திய கமல்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அனிதா மரணத்தின் எதிரொலி! பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்திய கமல்

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மகள் அனிதா என்பவர் நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தோல்வியில் முடிய மன விரக்தியில் இன்று சிறிது நேரத்துக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

2 தேர்வில் 1200 க்கு 1176 மதிப்பெண் பெற்ற அனிதாவுக்கு நேர்ந்த சோகம் கண்கலங்க வைக்கிறது. அனிதாவின் மரண செய்தியை அறிந்து தமிழகமே கதிகலங்கி போயுள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் BiggBoss நிகழ்ச்சி ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசனை நிகழ்ச்சியில் பார்க்க ரசிகர்கள் அவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனர்.

அனிதா மரணம் அனைவரையும் கஷ்டப்படுத்தியுள்ளது நிலையில் கமல்ஹாசனும் அனிதா குடும்பத்தை நேரில் சந்திக்க முடிவு செய்ததால் அவர் BiggBoss நிகழ்ச்சியின் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top