நடிகர் கமல்,ரஜினி,மோகன்லால், சிவாஜி,மம்முட்டி,என்.டி.ஆர்,ராஜ்குமார் என அனைத்து சூப்பர் ஸ்டார்களுடனும் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு,கன்னட ஆகிய படங்களில் சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்தவர் மாதவி.

இவர் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு கமலுடன் டிக்..டிக்..டிக் படத்தில் நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தனது நினைவுகளை தனியார் டிவியில் சமீபத்தில் கூறியிருந்தார். தமிழ்ப்படங்களில் எல்லா கதாநாயகர்களுடன் நடித்திருந்தாலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடித்ததை என்னால் எப்போதும் மறக்க முடியாது.

எனக்கு அசைவ உணவு ரொம்ப பிடிக்கும், நான் அசைவ உணவு அதிகம் விரும்பி சாப்பிடுவேன்.குறிப்பாக நண்டு எனக்கு மிகவும் பிடித்த உணவு. ஒரு முறை நான் சிவாஜி சார் உடன் ஒரு படத்தில் நடித்த போது உனக்கு என்ன பிடிக்கும் என்றார். நான் நண்டு பிடிக்கும் என்றேன். அடுத்த நாள் படப்பிடிப்பின் போது, உணவு இடைவேளையில் அவர் என்னை சாப்பாட்டிற்கு அழைத்தார்.

நான் சென்று பார்த்த பொழுது எனக்காக பிரத்யேகமாக நண்டு தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. யார் கொண்டு வந்தது என கேட்பதற்கு முன்பாகவே “நான் தான் உனக்கு பிடிக்குமே என வீட்டில் செய்யச் சொன்னேன். என் மனைவி செய்து அனுப்பியிருக்கிறாள்’ என சிவாஜி சார் சொன்னார். என்னால் சில நிமிடம் பேசவே முடியவில்லை.

தன் உடன் நடிக்கும் சக கலைஞர்கள் மீது அவருக்குதான் எத்தனை பற்றும் பாசமும்? நடிப்பை பொறுத்தவரை நான் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன் மேலும் பல உதவிகளையும் அறிவுரைகளையும் வழங்கியதாக அவர் தெரிவித்தார். திருமணத்திற்கு பிறகு இவர் படங்களில் இருந்து விலகினார்