இரண்டு படங்களின் அப்டேட் கொடுத்த ஆண்டவர்.. பிரபாஸுக்கு மட்டும் காட்டும் ஓரவஞ்சனை

Kamal : விக்ரம் படம் 2022 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த வருடம் கமலின் படங்கள் எதுவுமே வெளியாகாமல் இருந்தது. இதனால் கமல் ரசிகர்கள் அவருடைய அடுத்த படத்திற்காக எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதுகுறித்து சமீபத்தில் கமல் பேசுகையில் இழந்த நேரத்தை ஈடு செய்ய முடியாது, மேலும் உற்பத்தியும் விரிவுபடுத்த முடியாது, தரம் தான் மிக முக்கியம். அந்த வகையில் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களை முடித்து உள்ளோம்.

ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்தி சிங் என பலர் நடித்திருக்கின்றனர். மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

தக் லைஃப் அப்டேட்

இந்தியன் 3 படத்தில் 70% படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக தக் லைஃப் படத்தை பற்றியும் கமல் பேசி இருந்தார். அதாவது கமல் இப்போது திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளார். இந்த தேர்தல் பிரச்சாரம் முடிந்த பிறகு மணிரத்னம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.

இவ்வாறு தன்னுடைய இரண்டு படங்களின் அப்டேட் கொடுத்த நிலையில் கல்கி 2898 AD பற்றி எந்த அப்டேட் கொடுக்கவில்லை. பிரபாஸ், அமிதாப் பச்சன, தீபிகா படுகோன் என மிகப் பெரிய திரைபட்டாளமே நடிக்கும் இந்த படத்தில் கமலஹாசன் ஒரு அங்கமாக இருக்கிறார்.

600 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில் கமலுக்கும் பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் மே மாதம் ரிலீஸாகும் என்று கூறப்பட்ட நிலையில் இப்போது தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் தன்னுடைய படங்களின் அப்டேட் கொடுத்த கமல், பிரபாஸின் படத்திற்கு மட்டும் ஓரவஞ்சனை காட்டி பேசாமல் இருந்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்