நேற்று சென்னையில் நடந்த ஐந்தாவது புரோ கபடி லீக் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ் தலைவாஸ் அணிக்கான உடை அறிமுகம் செய்யும் விழாவில் கிரிக்கெட் நாயகன் சச்சினும் நம்ம உலகநாயகன் கமலும் கலந்துகிட்டாங்க.

இவுங்க மட்டும் இல்லாமல் தெலுங்கு ஸ்டார்ஸ் அல்லு அர்ஜுன் மற்றும் ராம் சரண் இவுங்களும் கலந்துகிட்டாங்க…

இதில் பேசிய கமல் ‘கபடி அணிக்கு தலைவாஸ்னு பன்மையில் பெயர் வைச்சது ரொம்ப சந்தோசமா இருக்கு… பன்மைல ஒரு ஒற்றுமை இருக்கும். ஆனா இப்போ எல்லாரும் ஒருமைல பேசுறது சகஜமாகிருச்சு’ (இப்படி சொன்னவுடன் அங்கிருந்தோர் அனைவரும் சிரித்து, கைதட்டி, விசில் அடித்தனர்)

உடனே கமல் அங்கிருந்த மக்களை பார்த்து ‘ஏங்க நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா?’னு கேட்டாரு அங்கிருந்தோர் ‘நீங்க சரியா பேசுறதுதான் பிரச்சனை’னு சொல்லி சிரிச்சாங்க…

‘தலைவாஸ்னா எல்லாரும் தலைவர்னு பொருள் வருது அதாவது எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்னு அர்த்தம், இதைதான் நானும் எல்லார்கிட்டயும் சொல்றேன்’னு சொல்லி சிரித்தார்.