Connect with us

Cinemapettai

அரசியலில் ரஜினியும் நானும் இணைந்து பயணிப்போம்.. கமல் பரபரப்பு பேட்டி

rajini-kamal-politics

Politics | அரசியல்

அரசியலில் ரஜினியும் நானும் இணைந்து பயணிப்போம்.. கமல் பரபரப்பு பேட்டி

தமிழக மேம்பாட்டிற்காக பணியாற்ற வேண்டியிருந்தால் ரஜினியுடன் இணைந்து பயணிப்போம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

ஒடிசாவில் மனித வள மேம்பாட்டு குறித்த டாக்டர் பட்டம் எனக்கு வழங்கப்பட்டது. அந்த பல்கலைக்கழகத்தில் படிக்காதவருக்கு ஒருவருக்கு முதல் டாக்டர் பட்டம் எனக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஒடிசா முதல்வர் கையால் விருது பெற்றது மிகுந்த பெருமையாக சந்தோசமாக மகிழ்ச்சியாக இருந்தது. மனித வள மேம்பாட்டு குறித்து பல ஆண்டுகளாக பேசிக் கொண்டு இருக்கிறேன்.

ரஜினியும் நானும் இணைவதில் அதிசயம் ஒன்னும் இல்லை. 44 ஆண்டுகளாக இணைந்து தான் உள்ளோம். அரசியலில் இணைய வேண்டிய நிலை வந்தால் இணைவோம். இப்பொழுது வேலை தான் முக்கியம். சேர்ந்து பயணிப்பது என்பது தமிழக மேம்பாட்டிற்காக பயணிக்க வேண்டியதாக இருந்தால் பயணிப்போம்.

இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச மக்களுக்கு நல்ல தலைவராக இருக்க வேண்டும். நியாயமான ஆட்சியை தர வேண்டியது அவரது கடமையாகும். இலங்கை நாட்டு மக்களின் தீர்ப்பு. இங்கேயும் பல முறை நடந்து உள்ளது. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவர் எல்லா மக்களுக்கும் சமமாக நியாயம் வழங்க வேண்டியது அவரது கடமை. இதை தனியாக யாரும் நினைவுப்படுத்த வேண்டியதில்லை. நல்ல தலைவராக இருக்கும்பட்சத்தில் நினைவுப்படுத்த வேண்டியதில்லை.

நாடு எங்கும் ஏற்படும் தர்க்கம் இப்போது படிக்கும் கல்லூரிகளிலும் நுழைந்து இருப்பது வருத்தமளிக்கிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து ரஜினிகாந்த் கூறியது விமர்சனம் அல்ல. நிதர்சனம். உண்மை என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top