Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இவரை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே தெரிந்து கொள்ள வேண்டும்… யாரை சொல்கிறார் கமல்?

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இவர் குறித்து இந்தியாவே தெரிந்து கொள்ள வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் ட்ராபிக் ராமசாமி குறித்து தெரிவித்து இருக்கிறார்.

சமூகத்தின் பிரச்சனைகளில் தொடர்ந்து போராடி வருபவர் ட்ராபிக் ராமசாமி. முதுமையால் அவர் உடல் தளர்ந்து விட்டாலும், எத்தனை துன்பம் எத்தனை வறுமை என வந்த போதிலும், சமூகத்திற்காக மட்டுமே என் அர்ப்பணிப்பு என இருப்பவர். அவரின் வாழ்க்கை வரலாறு பலருக்கு தெரியாது. பல அவரை கேளியாக கூட இதுவரை பார்த்து வருகிறார்கள். இதனால், அவரின் வாழ்வில் நடப்பது என்ன என்பதை ரசிகர்களிடம் கொண்டு செல்ல கோலிவுட்டில் ட்ராபிக் ராமசாமி என்ற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. ரியல் ஹீரோ ராமசாமியாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து இருக்கிறார். அவரின் மனைவியாக ரோகிணி நடித்துள்ளார். படத்தில் விஜய் சேதுபதி மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை அறிமுக இயக்குனர் விக்கி இயக்குகிறார். பிரகாஷ்ராஜ், ஆர்.கே. சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ’ஹரஹரமகா தேவகி’ இசையமைப்பாளர் பாலமுரளி பாலு படத்தை இசையமைத்து இருக்கிறார். பரபரப்பாக உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு பிஸியாக இருக்கிறது.

இந்நிலையில், ட்ராபிக் ராமசாமி படத்தின் முன்னோட்டத்தை பார்த்த கமல்ஹாசன் வெகுவாக பாராட்டி இருக்கிறார். அவர் பேசுகையில், மகாத்மா காந்தி மாதிரி ஆளை நாடாளுமன்ற கிணற்றுக்குள் தேடினால் இருக்க மாட்டார். பாத சாரிகளுக்குள் தான் இருப்பார். அப்படித் தேடாமல் கிடைத்தவர் தான் ட்ராபிக் ராமசாமி. ஊடகங்கள் இவரை எக்ஸென்ட்ரிக் என்பதைப் போல சித்தரித்ததுண்டு. ஆனால் ட்ராபிக் ராமசாமி எல்லாருடைய மனதிலும் மனசாட்சியாக உறுத்திக் கொண்டிருக்கிறார். தைரியத்தைச் செயல்படுத்திய வீரரின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சி, பாராட்டுக்குரியது. படக்குழுவுக்கு இதுவே முதல் வெற்றி. அடுத்து வணிக வெற்றியும் வந்து சேரும். எஸ்.ஏ.சியும் இந்த ட்ராபிக் ராமசாமியும் ஒன்றாக நடந்து போகும் போது சகோதர்கள் போல இருக்கிறார்கள். ட்ராபிக் ராமசாமி என்பவரை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே அறிய வேண்டும் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top