Tamil Cinema News | சினிமா செய்திகள்
செருப்பை வைத்து பஞ்சாயத்து, பிக் பாஸ்ஸில் பாலாஜியை புரட்டி எடுத்த கமல்.. ஆண்கள் அடக்குமுறையை தெளிவுபடுத்திய ஆண்டவர்!
விஜய் டிவியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் 60 நாட்களை கடந்து கோலாகலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியின் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் வந்து வீட்டில் உள்ள பஞ்சாயத்துகளை தீர்த்து வைப்பது வழக்கம்.
அந்த வகையில், நேற்றய எபிசோடில் பேசிய கமல், பாலாஜியின் செருப்பு பஞ்சாயத்தை வைத்து அவரை புரட்டி எடுத்தது பிக் பாஸ் ரசிகர்களிடையே அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. அதாவது பிக் பாஸ் கொடுத்த ஒரு டாஸ்க்கில் பாலாஜிக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாலாஜி தன் காலில் அணிந்திருந்த செருப்பை எடுத்து தன்னைத்தானே அடித்துக் கொண்டது பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் வாயடைத்துப் போகச் செய்தது.
மேலும் நேற்றய எபிசோடில் கமல், இதைப் பற்றி விசாரித்ததோடு பாலாஜியை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய கமல், ‘நீங்க செஞ்சது ரொம்ப தப்பு. நீங்க வன்முறையை கையில் எடுக்கல, என்ன பயமுறுத்திடீங்க. இது ஒரு வகையான அடக்குமுறை போல் எனக்கு தெரிந்தது’ என்று பாலாஜியை சவுக்கால் அடித்தது போல் பேசினார். இதனால் பாலாஜியின் முகம் அப்படியே மாறிப் போனது.

Balaji
இவ்வாறு, பிக்பாஸ் ரசிகர்கள் பலரின் எண்ண ஓட்டத்தை கமல் எடுத்துக் கூறியிருப்பது பாராட்டிற்குரியது என்று பலர் தங்களது கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.
