கவுதம் கார்த்திக் நடிக்கும் படம் முத்துராமலிங்கம், குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் டி.விஜய் பிரகாஷ் தயாரிக்கிறார், இளையராஜா இசை அமைக்கும் இந்தப் படத்திற்கு 13 வருடங்களுக்கு பிறகு பஞ்சு அருணாசலம் பாடல்களை எழுதியுள்ளார்.

அதில் ஒரு பாடல் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் புகழ்பாடும் பாடலாகும். “தெற்கு தேச சிங்கமடா, முத்துராமலிங்கமடா, சுத்த பசும்பொன் தங்கமடா…” என்று தொடங்கும் அந்தப் பாடலை கமல் பாடியுள்ளார். பல வருடங்களுக்கு பிறகு இளையராஜாவின் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் இளையராஜா, பஞ்சு அருணாசலம் கமல் இணைந்து பணியாற்றியது, சினிமா வரலாற்றில் முக்கிய நிகழ்வாகும்.

அதிகம் படித்தவை:  நாமினேஷனுக்காக இரண்டு டீமாக பிரிந்த போட்டியாளர்கள்.! இந்த வார நாமினேஷன் யார் தெரியுமா.?

முத்துராமலிங்கம் படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, சுமன், ராதாரவி, சுகன்யா, ரேகா, சிங்கம்புலி, சிங்கமுத்து ஆகியோரும் நடிக்கிறார்கள். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், ராஜதுரை இயக்குகிறார். படப்பிடிப்புகள் ராஜபாளையம் பகுதியில் நடந்து வருகிறது.