சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

68 வயதிலும் ஜம்முன்னு மாஸ் காட்டும் கமல்.. பின்னால் இருக்கும் நடிகரின் மனைவி

படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன், ரஜினியை பார்த்து வயசானாலும் ஸ்டைலும், அழகும் உன்ன விட்டு போகல என்று கூறுவார். அந்த டயலாக் இப்போது கமலுக்கு ரொம்பவே பொருத்தமாக இருக்கிறது. ஏனென்றால் 68 வயதிலும் அவர் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக ஜம்முன்னு இருப்பதை பார்த்தால் ஆச்சரியமாக தான் இருக்கிறது.

அந்த வகையில் சமீபகாலமாக கமல் கலந்து கொள்ளும் பொது விழாக்கள், சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் என அனைத்திலும் அட்டகாசமாக உடை அணிந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட அவருடைய உடைகள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது. அதிலும் அந்த நிகழ்ச்சியில் கமல் வாரா வாரம் வித விதமான கதர் உடைகளை அணிந்து வருவார்.

Also read: ரஜினி, கமலுக்கு அடையாளமாய் இருக்கும் படம்.. பாதியிலேயே கைவிடப்பட இருந்த காரணம்

அதற்கென பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அதே போன்று அவருடைய உடைகளில் ஒரு நேர்த்தியும், ஸ்டைலும் இருக்கும். அதுதான் அவரை இந்த வயதிலும் கெத்தாக காட்டுகிறது. இப்படி பலரும் வியக்கும் வகையில் அவர் விதவிதமாக உடை அணிவதற்கு பின்னால் ஒரு நடிகரின் மனைவிதான் இருக்கிறார்.

அதாவது இப்போது கமலுக்கு காஸ்டியூம் டிசைனராக இருப்பவர் தான் அமிர்தா ராம். இவர் வேறு யாரும் கிடையாது பல திரைப்படங்கள், சீரியல்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகர் ராம்ஜியின் மனைவி தான். இவர் டிசைன் செய்து தரும் உடைகளை அணிந்து கொண்டு தான் உலக நாயகன் இப்போது மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார்.

Also read: பிரபல நடிகையின் நிறைவேறாத காதல்.. முன்னாள் காதலியின் ஆசையை நிறைவேற்றிய கமல்!

அதன் மூலம் அவர் புது ட்ரெண்டையும் உருவாக்குகிறார். இன்னும் சொல்லப்போனால் கமல் அந்த உடைகளில் மிக இளமையாக இருக்கிறார் என்பதுதான் அனைவரின் கருத்தாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்தியன் 2 திரைப்படத்திற்கும் அமிர்தா தான் காஸ்டியூம் டிசைனராக இருக்கிறார்.

அதனாலேயே அந்த படத்தில் கமலின் தோற்றம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. ஆனால் அதற்கு நாம் இன்னும் சில காலம் பொறுத்து இருந்து தான் ஆக வேண்டும். அந்த வகையில் அமிர்தா ராம் உலக நாயகனுக்கு மட்டுமல்லாமல் பல செலிபிரிட்டிகளுக்கும் காஸ்டியூம் டிசைனராக இருக்கிறார்.

Also read: இரண்டு பக்கமும் ரஜினிக்கு கொடுக்கும் நெருக்கடி.. ரேசில் இருந்து விலகும் உலக நாயகன்

- Advertisement -

Trending News