Connect with us
Cinemapettai

Cinemapettai

sanam-balaji-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தறுதலை விவகாரத்தில் சிக்கிய பாலாஜி.. எந்த மூடுல இருக்கீங்க.? வெளுத்து வீசிய கமல்!

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன்4. இந்நிகழ்ச்சியில் அதிகம் கண்டெண்ட் கொடுக்கும் போட்டியாளராக பாலாஜி விளங்குகிறார்.

இந்நிலையில் பாலாஜியை கமல் சரமாரியாக வெளுத்து வாங்கியது  ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

ஏனென்றால் சில தினத்திற்கு முன்பு பாலாஜி ‘தறுதலை’ என்ற வார்த்தையை சொல்லி சனம் ஷெட்டி திட்டியுள்ளார்.

இதனைத் தவறு என்று கமல் சுட்டிக் காட்டியதோடு மட்டுமல்லாமல், எந்த மூடுல இருக்கீங்க பாலாஜி.. இந்நிகழ்ச்சியை பார்க்கும் குழந்தைகளுக்கும் இந்த வார்த்தை முன்மாதிரி ஆகிவிடக் கூடாது என்றும் கண்டித்தார்.

மேலும் சனம் ஷெட்டியைப் பார்த்து ‘தறுதலை’ என்ற வார்த்தை அடங்கிய பாடலை பாலாஜி அடிக்கடி பாடுகிறார் என்ற குற்றச்சாட்டை பாலாஜியின் மீது சனம் ஷெட்டி கூறியுள்ளார்.

ஆனால் இதை மறுத்தார் பாலாஜி, மேலும் பாலாஜி எதார்த்தமாக தான் அந்தப் பாடலை பாடினார் என்று ஜித்தன் ரமேஷ் பாலாஜிக்கு ஆதரவாகப் பேசினார்.

இருந்தபோதும் மேடை அலங்காரத்திற்கு இந்த வார்த்தை அழகல்ல என்று கமல், பாலாஜி செய்தது தவறு என்பதை நாசூக்காக விமர்சித்தார். இதனால் வெறுப்பை தனது முகத்தில் தகதகவென வெளிக்காட்டினார் பாலாஜி.

sanam-balaji

sanam-balaji

Continue Reading
To Top