பிக் பாஸ்ஸில் ஜூலி தன்னை விரட்டும் நமீதா மற்றும் காயத்ரியை கைக்குள் போட்டுக்கொள்வதற்காக தன்னிடம் அன்பு காட்டிய ஓவியாவிற்கு எதிராக நாடகமாடியது அனைவரும் அறிந்ததே.

இது தினம் தினம் மட்டற்ற உறுப்பினர்களின் கோவத்தை ஓவியாவிற்கு எதிராக திருப்பியது… அனைவரும் ஓவியாவிற்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தனர். மேலும் ஓவியாவை கமலிடம் கூறி வீட்டை விட்டு வெளியேற்றவும் முடிவு செய்திருந்தனர்.

 

இந்நிலையில் நேற்று நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரிடமும் பொறுமையாய் கருத்து கெட்ட கமல் இறுதியாக உண்மையில் என்ன நடந்தது என்ற வீடியோவை அனைவருக்கும் போட்டு காட்டினார். இதில் ஜூலி பொய்யாக நடிப்பதும் ஓவியாவை தவறாக பிறரிடம் சித்தரிப்பதும் அனைவருக்கும் தெரியவந்தது.

இந்நிலையில் ஜூலி கமலிடம் “என்னுடைய Manipulative Behavior னால நான் தவறுதலா ஓவியா பற்றி சொல்லிட்டேன்” என்றார் இதை கேட்டு சிறிது கோவம் கொண்ட கமல் “இது Manipulation கிடையாது hallucination” என்றார். இதை கேட்டவுடன் கூட்டத்தில் இருந்த அனைவரும் கைதட்டி விசில் அடித்தனர்.

அதன் பின் ஜூலி எல்லாரிடமும் சென்று “கமல் என்னை பைத்தியம் என்று கூறுகிறார்” என்று சொல்லி அழுதார். பிற உறுப்பினர்கள் அனைவரும் ஜூலியை சமாதானம் செய்தனர்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: பல நாள் ஜூலி ஒருநாள் அகப்படுவாள்.