fbpx
Connect with us

இந்த தேர்தலில் நான் ஓட்டு போட மாட்டேன்- கமல் கருத்திற்கு எதிராக எழும்பும் பல கேள்விகள்

இந்த தேர்தலில் நான் ஓட்டு போட மாட்டேன்- கமல் கருத்திற்கு எதிராக எழும்பும் பல கேள்விகள்

kamal-haasanதமிழகத்தில் வரும் மே 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அதே தேதியில்தான் கமல்ஹாசனின் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கவுள்ளது. எனவே கமல் இந்த தேர்தலில் ஓட்டு போட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் கமல் இந்த தேர்தலில் ஓட்டு போட மாட்டார் என்பதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கின்றதாம். அது என்னவென்பதை கமலே கூறியதை படியுங்கள்:
எனது சபாஷ் நாயுடு படப்பிடிப்பு, மே 16ம் தேதி தொடங்குகிறது. அதனால் ஷூட்டிங் போய்விடுவேன். இந்த சட்டமன்ற தேர்தலில் நான் வாக்களிக்க மாட்டேன் . ஏனென்றால், சென்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சாவடிக்கு போனபோது என் வாக்கினை வேறு யாரோ போட்டுவிட்டு சென்றனர். இந்த முறை வாக்களிப்பதற்காக கேட்டேன். வாக்காளர் பட்டியலில் என் பெயரே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இத்தனைக்கும் தேர்தல் கமிஷன் அதிகாரி என் நெருங்கிய நண்பர். இருந்தும் என்ன செய்வது?” என்று கூறியுள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் கடந்த 15ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தில் தகுந்த ஆதாரங்களுடன் விண்ணப்பித்தால் அவர்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என பலமுறை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தும் அவற்றை கமல் செய்யாமல், தற்போது கமல் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று புலம்புவது சரியா? என்று பலர் டுவிட்டரில் கேள்வி கேட்டுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top