fbpx
Connect with us

Cinemapettai

அச்சு அசல் சத்யா பட கமல் போல் இருக்கும் விஜய் சேதுபதி.. ஒரே நாளில் இணையதளத்தை மிரளவிட்ட மக்கள் செல்வன்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அச்சு அசல் சத்யா பட கமல் போல் இருக்கும் விஜய் சேதுபதி.. ஒரே நாளில் இணையதளத்தை மிரளவிட்ட மக்கள் செல்வன்

குறுகிய காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து கொண்டவர் விஜய் சேதுபதி.

தனது சினிமா வாழ்க்கையை கூத்துப்பட்டறையில் இருந்து தொடங்கிய விஜய் சேதுபதி, பின்பு ஜூனியர் ஆர்டிஸ்டாக வலம் வந்து கொண்டிருந்தார்.

2000-இல் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் சிறு வேடத்தில் நடித்தவர். தனது எதார்த்தமான நடிப்பில் ரசிகர் மனதில் நீங்க இடம் பிடித்தவர்.

தற்போது பல முன்னணி நடிகர்களுடன் நேருக்கு நேர் வில்லனாக பட்டையை கிளப்பி வருகிறார். மாஸ்டர் படத்தில் தளபதிக்கு வில்லனாக நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி தனது சினிமா வாழ்க்கையை தொடங்கும் போது எடுத்த போட்டோ ஷூட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது கமலஹாசன் சத்யா படத்தில் இருக்கும் கதாபாத்திரத்தின் தோற்றத்தில் விஜய் சேதுபதி இருப்பதாக ரசிகர்கள் இதனை அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

vijay-sethupathy-1

vijay-sethupathy-1

இதனால் கமல் போல சினிமாவில் இடம் பிடித்து விட வேண்டும் என்ற வெறி இருப்பதாக தெரிகிறது. அச்சு அசலாக சத்யா கமல் போல் இருக்கும் விஜய் சேதுபதி புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

vijay-sethupathy-3

vijay-sethupathy-3

Continue Reading
To Top