விஜய் டிவி தற்போது அடுத்த கட்டமாக பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிகளுக்கான வேலைகளை தொடங்கி விட்டது. இதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம்.
ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழிலும் அதே பெயரில் கொண்டுவந்தது விஜய் டிவி. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்ததால் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டன.
அடுத்ததாக பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிகளுக்கான போட்டியாளர்களை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது விஜய் டிவி நிறுவனம். மேலும் இந்த சீசனையும் உலகநாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளாராம்.
முன்னதாக சிம்பு, பார்த்திபன் என பல பெயர்கள் அடிபட்ட நிலையில் மீண்டும் கமல் வசமே சென்றடைந்துள்ளது விஜய் டிவி நிறுவனம். ஆனால் இந்த முறை கமல்ஹாசனின் சம்பளம் கடந்த வருடத்தை விட 20 கோடி அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.
கடந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமலஹாசன் 30 கோடி சம்பளம் பேசியதாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த முறை பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்காக சுமார் 50 கோடி சம்பளம் பேசி உள்ளாராம்.
இதில் ஏற்கனவே பாதியை வாங்கி தேர்தலில் செலவு செய்துவிட்டதாக மக்கள் நீதி மையத்தை சேர்ந்த நபர் ஒருவர் நேரடியாக பேட்டி ஒன்றில் தெரிவித்ததன் மூலம் இந்த விஷயம் வெளிவந்து இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. முதலில் ஜூன் மாத மத்தியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்க இருந்த நிலையில் தற்போது கடந்த வருடத்தைப் போல செப்டம்பர் மாதத்திற்கு மாற்றப்படலாம் எனவும் தெரிகிறது.