News | செய்திகள்
மாணவர்கள் அடிக்க அடிக்க எந்திரிப்பாங்க, கேலிக்கூத்து அரசு : கமல் சொல்கிறார்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து கண்டுகொள்ளாத தமிழக அரசை நடிகர் கமலஹாசன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டத்தை அடித்து விரட்ட முனைவது நகைப்புக்குரியது.
செய்யாதே என்றால் செய்வோம் என்பார்கள் மாணவர்கள். இது சரி இல்லை என்றால் ஏன் இல்லை என்று கேட்பார்கள். போகாதே என்றால் போவோம் என்பார்கள்.
படி என்றால் படிக்க மாட்டோம் என்பார்கள். ஆனால் கொஞ்சம் பக்குவமாக புரிய வைத்தால் உடனடியாக ஏற்றுக்கொள்ளும் பருவமும் மாணவ பருவம் தான்.
இவர்களை அடித்தால் ரத்தம் தான் வரும். புத்தி வராது. கேலிக்குரிய அரசு வீழ்ந்த வரலாறுகள் அதிகம் ! இப்படி டுவிட்டரில் கருத்து சொல்ல மீண்டும் கமலை போட்டு தாக்கி இருக்கிறார்.சு.சுவாமி.
மாணவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். நீ எங்களுக்காக குரல் கொடுக்கிறாயா? நன்றி உன் படங்களை தியேட்டரில் போய் பார்க்கிறோம் ஆனால், எங்களுக்கு தலைவன் ஒரு நடிகனாக இருக்க முடியாது என்று வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிர்கிறார்கள்.
