புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

3 பட்டங்களும் வேண்டாம் என ஒதுக்கும் கமல்.. நான்கு வருடங்களாக குழம்பிய ஆழ்வார்பேட்டை ஆளு

நம்மவர், ஆழ்வார்பேட்டை ஆண்டவர், உலக நாயகன் என கமலை அழைத்து வந்தனர். ஆனால் தற்சமயம் கமல் இந்த பட்டங்கள் தனக்கு வேண்டாம் என்றும், இனிமேல் தன்னை கமலஹாசன் அல்லது கே எச் என்று அழைக்கும் படி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு அவரது நெருங்கிய வட்டாரங்கள் பல காரணங்கள் கூறுகின்றனர்.

கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பே பிறந்தநாள் தினத்தன்று கமல் இந்த பட்டம் தனக்கு வேண்டாம் என அறிக்கை வெளியிடலாம் என எண்ணி இருந்தாராம். ஆனால் அதற்கு இப்பொழுதுதான் நேரம் கூடி வந்திருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து உலக நாயகன் பட்டம் மீது அவருக்கு அதிருப்தி இருந்து வந்ததாம்.

உலக நாயகன் என்பது யுனிவர்சல் ஹீரோ என்று அர்த்தம் கொண்ட பெயராகும். அதாவது 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார், எல்லா மொழிகளிலும் நடித்து பெயர் பெற்றவர். இந்த டைட்டிலை அவருக்கு கொடுத்தது கே எஸ் ரவிக்குமார் “தெனாலி” படத்தில் இருந்து இது அவருக்கு சொந்தமானது. அப்பொழுதே கமல் மிகவும் நெருடலுடன் அந்த டைட்டிலை வாங்கிக் கொண்டார்.

அந்த நாளிலிருந்து, இதற்கு நாம் தகுதியானவரா என்ற எண்ணம் அவர் மனதில் இருந்து வந்ததாம். இது போக ஆழ்வார்பேட்டை ஆண்டவர், நம்மவர் என்ற டைட்டிலும் அவருக்கு உறுத்தி வந்தது. சினிமாவில் கரை கண்டவர் யாரும் இல்லை. புது புது டெக்னாலஜிகள் வளர்ந்து வரும் வேளையில் நமக்கு இந்த பெயர் வேண்டாம் என முடிவெடுத்துவிட்டார்.

இப்பொழுது அமெரிக்கா சென்று இருக்கிறார். அதுவும் ஏ ஐ டெக்னாலஜி பற்றி படிப்பதற்கு. தக்லைப் படத்திற்கு பின்னர் ஆறு மாத காலம் படிப்பது தான் அவருக்கு வேலை. இதையும் தாண்டி சினிமாவில் நிறைய விஷயங்கள் இருக்கிறது அந்த புது புது விஷயங்களை எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையும் அவரிடம் இருக்கிறது. இதனால் உலகநாயகன் பட்டம் தனக்கு வேண்டாம் என கூறிவிட்டார்.

- Advertisement -

Trending News