Connect with us

Cinemapettai

சூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாத உலகநாயகன்.. அரசியலால் பிரிந்த 40 வருட நட்பு?

kamal-rajini

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாத உலகநாயகன்.. அரசியலால் பிரிந்த 40 வருட நட்பு?

வருடாவருடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளுக்கு தவறாமல் வாழ்த்து சொல்லும் உலகநாயகன் கமலஹாசன் இந்த வருடம் வாழ்த்து சொல்லாமல் இருப்பது இருவருக்குள்ளும் நடக்கும் பனிப்போரை வெளியில் அம்பலப்படுத்தி விட்டது என்றே சொல்லலாம்.

ரஜினி வில்லனாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டங்களில் தனி ஒரு ஹீரோவாக நடியுங்கள் என ரஜினி பாதையை மாற்றி உச்சாணிக் கொம்பில் உயர்த்தியவர் உலகநாயகன் கமலஹாசன் என ரஜினியே பல மேடைகளில் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு மேல் நண்பர்களாக இருந்து வந்த ரஜினி மற்றும் கமல் இருவரும் தங்களுடைய குடும்ப விசேஷங்கள் முதல் சினிமா விசேஷங்கள் வரை அனைத்து இடங்களிலும் ஒன்றாகவே காணப்பட்டனர். இருவருக்குள்ளும் அப்படி ஒரு நட்பு இருப்பதை பார்த்து பலரும் பொறாமைபட்டனர்.

rajini-kamal-cinemapettai

rajini-kamal-cinemapettai

ஆனால் காலப்போக்கில் அரசியல் என்ற சூழ்ச்சியில் சிக்கி இருவருக்குள்ளும் இருந்த நல்ல நட்பில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எப்போதுமே ரஜினியின் பிறந்த நாளுக்கு முதல் நாள் வாழ்த்து தெரிவிப்போர் உலகநாயகன் கமலஹாசன்.

ஆனால் இந்த முறை ரஜினியின் பிறந்தநாள் முடிந்து மூன்று நாட்களுக்கு மேல் ஆன நிலையிலும் கமலஹாசன் தற்போது வரை தனது சமூக வலைதளப் பக்கங்களில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதை இருவருக்குள்ளும் பிரச்சனையை சொல்லாமல் சொல்லியுள்ளது. அதுமட்டுமில்லாமல் கமல் தற்போது நடிக்கும் விக்ரம் படத்தின் கதை முதலில் ரஜினிக்கு சொல்லப்பட்டு அவரும் நடிப்பதாக ஒப்புக்கொண்டு திடீரென விலகியதில் இருவருக்கும் மன கஷ்டமாம்.

மேலும் சமீபத்தில் உலக நாயகனிடம், ரஜினிகாந்திடம் உங்கள் கட்சிக்கு ஆதரவு கேட்பீர்களா? என்று கேட்டதற்கு, என் நண்பரிடம் கண்டிப்பாக ஆதரவு கேட்பேன் என குறிப்பிட்டிருந்தார் கமல். ஆனால் கமல்ஹாசனுக்கே அதிர்ச்சி அளிக்கும் வகையில் ரஜினி திடீரென புதிய கட்சி ஆரம்பிப்பதாக தெரிவித்துவிட்டார்.

சினிமாவில் ஆரம்பித்த பஞ்சாயத்து தற்போது அரசியலிலும் தொடர ஆரம்பித்துள்ளது. இருவருக்குள்ளும் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதைப்போல முழுமையாக பிரிந்து விட்டார்கள் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். பொறுத்திருந்து பார்ப்போம்!

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top