Connect with us
Cinemapettai

Cinemapettai

kamal-rajini-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினியை ஓரங்கட்டு, இப்போதைக்கு நம்மளே பார்த்துக்கலாம்.. லோகேஷ் கனகராஜுக்கு ஐடியா கொடுத்த கமல்!

தமிழ் சினிமாவில் தற்போதைய சென்சேஷனல் இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். மாநகரம், கைதி என்ற 2 படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை கவர்ந்தார்.

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இன்னும் அந்த படம் வெளியாக கூட இல்லை. ஆனால் லோகேஷ் கனகராஜுக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.

தெலுங்கில் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ள லோகேஷ் கனகராஜ் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கமல் தயாரிப்பில் ஒரு படம் இயக்க இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் சமீப காலமாக நிலவி வரும் சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் ரஜினி நடிப்பதில் இருந்து கொஞ்ச நாள் பிரேக் எடுத்துள்ளார். இதற்கிடையில் கமலஹாசனுக்கு ஓர் ஐடியா வந்துள்ளது.

ரஜினியை நம்பினால் நாட்கள் இழுத்து விடும். அவர் படப்பிடிப்புக்கு தயாராகி வரும் போது படத்தை எடுத்துக் கொள்ளலாம் எனவும், அதற்குள் நம்ம இருவரும் சேர்ந்து ஒரு படம் எடுத்துவிடலாம் என லோகேஷ் கனகராஜுக்கு கமல் வாக்கு கொடுத்துள்ளாராம்.

இதனைத் தொடர்ந்து தற்போது தன்னுடைய குருநாதரான கமல்ஹாசனை இயக்க கதையை ரெடி செய்து கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். நிலைமை சரியான பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் கமல் தயாரிக்கும் படமும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப் போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜை பார்த்து தற்போது பல முன்னணி இயக்குனர்கள் பொறாமையில் இருக்கிறார்களாம். குறிப்பாக அட்லீயை சொல்லலாம் என்கிறது ரசிகர்கள் வட்டாரம்.

Continue Reading
To Top