கடந்த வாரம் மோகன்லாலை சோட்டா பீம், ஜோக்கர் என கிண்டலடித்து சர்ச்சையில் சிக்கியவர் தான் பாலிவுட் நடிகர்… இல்லையில்லை பாலிவுட்டில் ஒருசில படங்களில் மட்டுமே தலைகாட்டியுள்ள நடிகர் கமால் ரஷீத் கான். பின்னர் மோகன்லால் பற்றி தெரியாமல் விமர்சித்து விட்டேன் என பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார். சரி ஒரு வழியாக மனிதர் அடங்கிவிட்டார் என நினைத்தால் நேற்று வெளியான ‘பாகுபலி-2’வையும் அதன் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி பற்றியும் கிண்டலாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார் இந்த கான் நடிகர்.

அதிகம் படித்தவை:  கார்த்தி, விஷாலுடன் இணைந்த ஆர்யா என்ன படமா இருக்கும் ?

ஊர் உலகமே ‘பாகுபலி-2’வின் மேக்கிங்கை பிரமித்து பாராட்டிக்கொண்டு இருக்க, இது வெறும் கார்ட்டூன் படம் போல உள்ளது என்றும், நான் தியேட்டருக்கு வந்தது ‘படம் பார்க்கத்தானே தவிர, கார்ட்டூன் பார்க்க அல்ல என்றும் நக்கலடித்துள்ளார் இந்த கமால் ஆர்.கான். மேலும் பாகுபலி முதல் பாகத்தை பார்த்துதான் தனக்கு தென்னிந்திய சினிமா பார்ப்பதற்கே ஆசை பிறந்தது என்றும் ‘பாகுபலி-2’வை பார்த்ததும் இனிமேல் தென்னிந்திய சினிமா எதையுமே பார்க்க கூடாது என்று முடிவு செய்து விட்டதாகவும் ‘பாகுபலி-2’ மேல் சேற்றை வாரி இறைத்துள்ளார் இந்த கான் நடிகர்.

அதிகம் படித்தவை:  சூரியை பார்த்து ஒருவர் கூட்டத்தில் என்ன கேட்டார் தெரியுமா?

 

யார் கண்டது இன்னும் சில தினங்களில் இதற்கும் மன்னிப்பு கேட்டாலும் கேட்பார்.. அடுத்ததாக இன்னொரு பிரபலத்தை விமர்சிக்க கிளம்பிவிடுவார்… இவரது வாய்க்கு பூட்டு போடப்போவது யார் என்பதுதான் தெரியவில்லை.